Friday, 4 March 2016

பூரம்

   பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்   :

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ,ட,டி,டு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மொ.மௌ ஆகியவையாகும்.


குணம்;
     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை ஆணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். காம உணர்வு அதிகமிருப்பதால் மனம் அலை பாயந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக் கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.
குடும்பம்;
     காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் மனைவி பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடி கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள்  ஏற்பட்டு வீடு, வண்டி வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும்.
தொழில்;
     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது  உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகமிருக்கும், சுற்றுலா துறை, பொது மக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணி புரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோக படுத்தக் கூடிய பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்களாகவும் வாகன திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாடத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

நோய்;
     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள் சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிபடுவார்கள். மின்சாரம் தாக்கும், மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;
     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சுக்கிர திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை பற்றி அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சூரிய திசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்திசை காலங்களில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
    மூன்றாவதாக வரக்கூடிய சந்திர திசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
   
நான்காவதாக வரும் ராகு திசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களின் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.

விருட்சம்;
     பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் பதினோரு மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய கூடிய நல்ல காரியங்கள்
     பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது,  வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
கஞ்சனூர்;
     கும்பகோணம்&மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீசுரர் கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.
நாவலூர்;
     தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாடக் கோயில் எழுந்தருளியுள்ள பலாசவனநாதர்&பெரிய நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
தலைச்சங்காடு;
     நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1.கி.மீ தூரத்திலுள்ள கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் அருள் பாலிக்கும் சங்கருணா தேவசுவரர்&சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம் இவற்றை வழிபாடு செய்தால் நற்பலனை பெற முடியும்.
கூற வேண்டிய மந்திரம்;
ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்தரங்கள்
பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
 
http://www.yourastrology.co.in/

Saturday, 13 February 2016

அதிஷ்டக் கற்கள்

http://varshinijothidam.com/



பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.

நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; எமது உடலுக்கு நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடிய "நவரத்தின கற்களை" கண்டறிந்து அதனைப் பாவிப்பதன் மூலம் எமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்றும் அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரே சூழ்நிலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் பல வித்தியாசங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
அதிஷ்டக் கற்கள் பாவிப்பதற்கான காரணங்கள்:
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, எமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிகளுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம். நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது. அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் எமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி எம்மீதுபட்டு வாழ்கை பிரகாசிக்கும் என்பது சோதிடர்கள் நம்பிக்கை. தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.

மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.
இராசிகளின் பிரகாரம் ஒருவருக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்;
மேஷம் - பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

கடகம் - முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது

துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் - பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

கும்பம் - நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்,
முத்து (pearl)



முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.

வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.


முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.


யாரெல்லாம் முத்து அணியலாம்

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம்.
ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.
எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.
மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்
.


வைரம் (diamond)

உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.

யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!

சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!

வைடூரியம் (cat's eye)

இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது  நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.

சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .

வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்

வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!


மாணிக்கம் (ruby)

இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .

பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .

மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.

மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .

யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.

மரகத பச்சை (emerald)

ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.

மரகதத்தின் மருத்துவ குணம்

மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்

புஷ்பராகம் (topaz)

இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்

தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்

பவழம் (coral)


இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.

யாரெல்லாம் பவழம் அணியலாம்

பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

நீலம் (sappihire)


ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.

நீலகல்லின் மருத்துவ குணம்

கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.

யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.

மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்
கோமேதகம் (hessonits)

புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.

யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.

எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?
ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!

அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!

ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்

திங்கள் : முத்து, வைடூரியம்

செவ்வாய் : பவழம்

புதன் : மரகதம்

வியாழன் : புஷ்பராகம்

வெள்ளி : வைரம்

சனி : நீலம்


நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.

சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)

சந்திர காந்த கற்கள்
இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்
தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.

சூரிய காந்த கற்கள்
இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.

யாரெல்லாம் அணியலாம் ..?
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.

நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு கண்ணோட்டம்

செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.

நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.

அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!
மாணிக்கம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல்

முத்து :
இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளிஅணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல், மோதிர விரல்

புஷ்பராகம், கனக புஷ்பராகம் :
இணைக்கும் உலோகம் - தங்கம்அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல்

கோமேதகம் :
இணைக்கும் உலோகம் - வெள்ளி அல்லது தங்கம்அணிய வேண்டிய விரல் - மோதிர விரல், நடு விரல்

மரகதம் :
இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளிஅணிய வேண்டிய விரல் - சுண்டு விரல், மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?
ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.

புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை

வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள் பயிரிடுவோர்

கோமேதகம் : ஜோதிடர், கைரேகை நிபுணர், அரசியல் விமர்சகர்



Friday, 5 February 2016

பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்

      திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்து பின்பே திருமணம் செய்கிறார்கள். ஒருவர் பிறக்கும்போது அவரின் ஜாதக ரீதியாக கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் அதை யோக ஜாதகம் என்கிறோம். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி இருந்தால் அதை தோஷ ஜாதகம் என்கிறோம்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டகரமானதாகிவிடும். பெண்ணின் ஜாதக ரீதியாக எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இருந்தால் இப்படிப்பட்ட தோஷங்கள் உண்டாகின்றன என பார்ப்போம்.
செவ்வாய் தோஷம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயானவர் குடும்ப ஸ்தானமான 2லும், சுக ஸ்தானமான 4 லிலும், களத்திர ஸ்தானமான 7லும், மாங்கல்ய ஸ்தானமான 8லும், கட்டில் சுக ஸ்தானமான 12லும் அமைவது செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். இப்படி தோஷம் அமைந்துள்ள பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்த்து திருமணம் செய்வது நல்லது.  2,4,7,8,12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் செவ்வாய் அமைந்திருப்பது போதுமானதாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.
ராகுகேது தோஷம்
செவ்வாய் தோஷம் பலருக்கு தெரிந்திருக்கிறது என்றாலும் அதைவிட கடுமையான தோஷமானது ராகு கேது தோஷமாகும். சர்ப கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஒரு  பெண்ணின் ஜாதகத்தில் 1,7  மற்றும் 2,8 ல் இருந்தாலும், 7,8 ம் அதிபதிகள் ராகு, கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும், ராகு கேதுவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ராகு கேது தோஷம் உண்டாகிறது. திருமண வயதில் ராகு கேதுவின் தசா புக்திகள் நடைபெற்றாலும், ராகு கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றாலும், சர்ப தோஷம் உண்டாகி திருமண சுபகாரியங்களில் தடை ஏற்படும். இந்த தோஷம் அமையப் பெற்ற பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்ப்பது நல்லது.
ராகுகேது தோஷம் அமையப் பெற்றவர்கள் திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது. ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலங்களில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயங்களுக்குச் சென்று எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
புத்திர தோஷம்
புத்திர பாக்கியம் என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான வரப்பிரசாதம் ஆகும். குழந்தை இல்லாதவர்களை மலடி பட்டம் கொடுத்து எந்தவொரு நல்ல காரியத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5ம் பாவமும், 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானம் என்பதால் அதில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதுவே 5.9ம் வீட்டில் ராகு, கேது, சனி, புதன் போன்ற  கிரகங்கள் அமையப் பெற்று பகைப் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படுகிறது. 
பெண்களின் மணவாழ்க்கையும், கேது பகவானும்
திருமண வயதை அடைந்தவர்களுக்கு ராகு, கேதுவின் தசா புத்திகள் நடைபெற்றால் மணவாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அதிலும் கேது ஞான காரகன் என்பதால் கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண மானவர்களுக்கு கூட இந்த கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெறுமேயானால் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட தடைகள் ஏற்படும். குறிப்பாக கட்டில் சுக வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பாதிப்படையும். இதற்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
மாங்கல்ய தோஷம்
பெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8ம் பாவம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். 8 ம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் 8ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. இதனால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு இடையூறு உண்டாகும்.

Thursday, 28 January 2016

ஜாதகத்தில் வீடுகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்

லக்கின பாவம்

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

மூன்றாம் பாவம்

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
  • 4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
  • குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
  • புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஆறாம் பாவம்

ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாம் பாவம்

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

பத்தாம் பாவம்

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினோராம் பாவம்

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.

Wednesday, 27 January 2016

இராசிக்கு ஏற்பத்தான் வாய்ப்பாள் மனைவி

ஓர் ஆணின் ஜாதகத்தில் அவன் பிறந்த இலக்கினத்துக்கு ஏழாமிடத்து இராசி எதுவென்று பார்க்கவேண்டும் அந்த ஏழாவதுஇராசியானது இராசிச் சக்கரத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுள் எந்த ராசியாக அமைகிறதோ அந்த இராசிக்கு ஏற்பத்தான் அந்த ஜாதகருக்கு வாய்க்கும் மனைவியின் அழகும் குணபாவங்களும் ஒழுக்கமும் அமைந்திருக்கும்

       உதாரணமாக நீங்கள் எடுத்துக்கொண்ட ஆணின் ஜாதக இலக்கினம் துலாமாக இருந்தால் அதற்கு ஏழாவது வீடு அல்லது ஸ்தானம் மேஷஇராசியாகும் இந்த மேஷ இராசிதான் துலாஇலக்கினகாரருக்கு உரிய களத்திரஸ்தானமாகும் இந்த மேஷ இராசிக்கு அதிபதி செவ்வாய் எனவே செவ்வாயே களத்திரபாவாதியாகவும் ஏழாதிபன் என்றும் வழங்குவார்கள் ஆகவே ஜாதகரின் இலக்கினத்துக்கு ஏழாவது ஸ்தானமாக அமைந்திருப்பது
மேஷ இராசியானால்
அந்த ஜாதகரின் மனைவி சபல சித்தமுள்ளவளாகவும் பணத்தின் மீது அதிகப்பிரியமுள்ளவளாகவும் பணம் சேர்ப்பதிலேயே அக்கறையுள்ளவளாகவும் இருப்பாள் கணவனிடத்திலும் பணத்தையே தான்பெரிதும் விரும்புவாள் எவையேனும் யாசிக்கும் குணமுள்ளவளாகவும் இருப்பாள்

ரிஷப இராசியானால்
மனைவியாக வாய்த்தவள் ஜாதகருக்கு சம்மாக ஒத்திருப்பாள்பணிவுள்ளவளாகவும் இருப்பாள் மென்மையும் இனிமையுமாகப் பேசுபவளாகவும் மிகவும் சாந்தகுணமுள்ளவளாகவும் அச்சமும் பெரியோர்களிடத்திலும் அந்தணர்களிடத்திலும் தெய்வங்களிடத்திலும் பக்தியுள்ளவளாகவும் இருப்பாள்

மிதுன இராசியானால்
பணத்துடன் கூடியவளாகவே மனைவி அமைவாள் நல்ல ரூபவதியாகவும் நற்குணமுள்ளவளாகவும் நல்ல நடத்தையுள்ளவளாகவும் அடக்கமான அலங்காரம் செய்து கொள்பவளாகவும் கஷ்ட குணமும் செயலும்பேச்சும் அற்றவளாகவும் விளங்குவாள்

கடக இராசியானால்
கணவனின் மனத்திற்கு பிரியமானவளாகவும் சகல செளபாக்கியங்களுடன் நற்குணமுள்ளவளாகவும் திகழ்வாள் தோஷம் எதுவும் இல்லாதவளாகவும் யாவருடனும் இனிமையாக பழகும் பண்புள்ளவளாகவும் அமைவாள் இந்த இராசி ஏழாமிடமாக அமையும் ஜாதகருக்கு ஒரே மனைவிதான் இருப்பாள் என்று சொல்வதிற்கில்லை ஏனென்றால் ஒரே களத்திரமாக இராது என்பது விதி

சிம்ம இராசியானால்
எதிலும் தீவிரமான சுபாவமுள்ளவளாகவும் சபலபுத்தியுள்ளவளாகவும் மிகவும் தைரியமுள்ளவளாகவும் திகழ்வாள் தாழ்ந்த நிலையிலிருப்பவளைப் போல் வேஷம் போடுவாள் பிறர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் ஆசையுள்ளவள் கடுமைக்குரலும் இளைத்த உடல்வாகும் குறைந்த புத்திரப்பேறும் உடையவளாக இருப்பாள்
கன்னி இராசியானால்
அமைகின்ற மனைவி அழகான உடற்கட்டுடையவள் பெரும்பாலும் புத்திரப்பேறு இருக்காது இவள் செளபாக்கியம் போபம் பொருட்செலவு பயம் இவற்றுடன் கூடியவளாகவும் இருப்பாள் யாரிடமும் அன்பும் பிரியமுமாகப் பேசுவாள் சாமர்த்தியம்மிக்கவள்

துலாம் இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி நல்ல சிறப்பிற்குரிய அங்கமற்றவளாகவும் பற்பல விதமான மனநாட்டங்களையும் இச்சைகளையும் கொண்டவளாகவும் புண்ணியச் செயல்களில் பற்றுள்ளவளாகவும் தானதர்ம்ம் செய்வதில் விருப்பமுள்ளவளாகவும் மிகுதியான புத்திர யோகமுள்ளவளாகவும் பெருத்த அங்கமுள்ளவளாகவும் இருப்பாள் பொதுவாக இப்படியுள்ள ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரங்கள் அமையும்

விருச்சிக இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி கஞ்சத்தனமான கருமியாகவும் எதையும் தீர யோசித்து ஒரே முயற்சியிலேயே எந்தக் காரியத்திலும் வெற்றியடையக் கூடியவளாகவும் பற்பல தெளர்பாக்கிய தோஷங்களுடனும் கூடியவளாக இருப்பாள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரம் இத்தகைய ஜாதகருக்கு அமையும்

தனுசு இராசியானால்
அவருக்கு மனைவியாக அமைபவள் புருஷ சரீரம் படைத்தவளாகவும் பக்தி நியாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாதவளாகவும் நிஷ்டூரமான குணமுள்ளவளாகவும் இனிமையாகப் பழகத் தெரியாதவளாகவும் புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் இல்லாதவளாகவும் இருப்பாள்

மகர இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி பார்ப்பவர்களுக்கு தர்ம நியாயம் தவறாதவளைப் போல நடிப்பவள் நல்ல பெண்ணுடல் கொண்டவள் கற்புள்ளவளாகவும் அழகிய குணபாவமுள்ளவளாகவும் நல்ல புத்திர்ர்களைப் பெற்றுத் தருபவளாகவும் இருப்பாள்

கும்ப இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி நிலையான புத்தியுள்ளவளாகவும் கணவனுக்குப் பணிவிடைகளைச் செய்வதில் பற்றுள்ளவளாகவும் தேவர் மற்றும் பிராமணபக்தியுள்ளவளாகவும் தர்ம்ம் செய்வதில் விருப்பமுள்ளவளைப் போல வெளிவேஷம் போடுபவளாகவும் சகலவிதமான சுகங்களையும் தருபவளாகவும் இருப்பாள்

மீன இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி விகாரமானவளாகவும் கெட்ட புத்தியுள்ளவளாகவும் சுயதர்ம்ம் நல்லநடத்தை நல்ல ஒழுக்கம் ஆகியவை இல்லாதவளாகவும் அன்பில்லாதவளாகவும் அடிக்கடி சண்டையிடும் குணமுள்ளவளாகவும் விளங்குவாள் இப்படித்தான் ஒவ்வோர் ஆணுக்கும் அவரது களத்திரபாவம் அமைந்துள்ள இராசிப்படிதான் மனைவி அமைவாளோ தவிர மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரமாக மட்டுமே இருப்பதில்லை சிலருக்கு இறைவன் கொடுத்த சாபத்தைப் போலவும் மனைவி அமைவதுண்டு ஆனால் அது திருமணம் செய்து கொள்ளும் போது தெரியாமற்போவது விதியின் வலிமையாகும் இதைத் தெளிவுபடுத்துவது ஜோதிட சாஸ்திரமாகும் ஒருவருக்கு மனைவி அமைவது அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானதிபதி இருக்குமிடத்தை பொறுத்தும் மாறுதல் அடையக்கூடும் அதன் விளக்கத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் இந்த விதிகள் இலக்கினத்துக்கும் இராசிக்கும் பொருத்தமானவை என்றாலும் இலக்கினத்துக்கு ஏழாவது பாவந்தான் களத்திர பாவமாகையால் கோட்சார பலனைப் பார்ப்பது நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கினத்தை அடிப்படையாக்க் கொண்டு தான் ஜாதகத்தைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் பலன்களையும் நிச்சயிக்க வேண்டும் இதில் குழப்பம் அடைந்துவிடக்கூடாது.

Wednesday, 20 January 2016

கிரகங்களின் பண்புகள் - காரகத்துவம்

கிரகங்கள் காரகத்துவம்
சூரியன்தந்தை, மகன், அரசன், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி, முதல்வர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மா, கடவுள், பெயர் & புகழ், வெளிச்சம், தலைநகரம், அதிகாரம், அரண்மனை, வலது கண்,வலது பக்கம், ஹவுஸ் வலது பக்க ஜன்னல்.
சந்திரன்அம்மா, பெண், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், மளிகை கடை, மருத்துவ கடை, மார்பகம், வயிறு, சிறுநீர் பாதை, இடது கண், வீட்டின் இடது பக்க ஜன்னல்,குளியல் அறை & மலசலம் கழிக்கும் இடம், தண்ணீரால் நிரம்பிய இடங்கள், கடல், ஏரி, ஆறு, மனம், இடப்பெயர்ச்சி, இடம் மாற்றம், குங்குமம், கலை, திரவ பொருட்கள், உணவு பொருட்கள், மேகங்கள், மழை,திருடன், விபச்சாரம், செய்தி, இயக்கம், ஒளி,திருட்டுத்தனமான செயல்பாடுகள், ஜோதிடம்,வேதங்கள், மருத்துவம், துணிகள்.
செவ்வாய் (குஜன்)2ம் இளைய சகோதரர், கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, ஆற்றல் மீட்டர், மின்மாற்றி, மின் மோட்டார்ஸ், ஹீட்டர்கள், கற்கள், தூண்கள், வீட்டு விட்டங்கள், பூமி, மலைத் தொடர், மலை, பாறைகள், சுரங்கங்கள், உலோகங்கள், ஈட்டி, தோட்டாக்கள், எதிரி, வன் பொருள், கத்தரிக்கோல், முக்கோண வடிவம், சக்தி, ஊசி, கத்தி, முள், அம்பு, இயந்திரங்கள், ஆயுதங்கள், விவசாயம்.
புதன்மாமா, மாமனார், 3ம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், பாய் நண்பர், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்பு, கணக்காளர், கணக்காய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடம், பெயிண்டர், வழக்கறிஞர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர்,விஞ்ஞானிகள், ஆராய்ச்சி பொறியாளர், மளிகை கடை, கைகள், கழுத்து, தோள், தோல், நெற்றி,
மொழி, தொண்டை, சுவர் பிளாஸ்டரிங், பார்வையாளர் அறை, படிக்கும் அறை, கார்டன், பூங்கா, நிலம், கல்வி, வர்த்தகம், அழகு, புதைசேற்று சுவர்கள், பயிர்கள், இலைகள், தகவல், பதிவு, பேச்சு, சொற்றிரம், அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள், ராஜதந்திரம், தந்திரம், மென்மையான விஷயங்கள், மண்,
வியாழன் (குரு)ஜீவகாரகர் (சொந்தம்), தொப்பை (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு,தொடை, பாதம், பறிப்பு,வீட்டின் கடவுள் அறை, நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், தேன், கடவுள், மாடு, கௌரவம்,பெருமரியாதை, மரியாதை,உண்மை,பொறுமை, அடக்கம்.
சுக்கிரன்சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி,விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடல், நகை கடை, பணக் கடன், மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், சுந்தரமானது, இனிப்பு, போதை, அழகான தோற்றம், அழகு, இரகசிய விடயங்கள், நடனம் அரங்கு, சினிமா திரையரங்கு, மகளிர் குழு.
சனிமூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் வேலைக்காரன், தொழில்,கேரியர், வேலை, சின், பாதம், பிட்டம், ஆசனவாய்,முட்டிகள், முழங்கால், செரிமானபை, வீட்டின் சேமிப்பு அறை, டைனிங் ஹால்,சாலை,காற்று சம்பந்தமான நோய்கள்,உல்லன் துணிகள்,இரும்பு,ஈயம், சுழல் காற்று, புயல், செங்கல் சூளையாளர், சூதாட்டம்,எண்ணெய் சுரங்கம்.
ராகுதந்தைவழி தாத்தா, வெளிநாட்டு பயணங்கள்,மின்னணுவியல், வான் பயணவியல்,நடிகர், புகைப்படம் எடுத்தல், சிபிஐ அதிகாரி,பாதுகாப்பு, கடத்தல், திருடன், வாய், தலை, காது,உதடுகள், குடல், மலக்குடல், விரைகள், முதன்மை நுழைவாயில்,பழைய வீடு, பாழடைந்த சுவர்,, சுவற்றில் விரிசல், இருண்ட அறை, பெரிய மண்டபம், கோபுரம்,முட்டை வடிவம், தனிமையான பகுதி,பரந்த சாலை, சுற்று வட்டம்,வட்ட வடிவம், இருள்,உடல்நலத்தை கவனிப்பு,மாயத்தோற்றம், மாயை, நிழல், குடை, சக்கர வடிவம்,சக்கரத்தின் சுற்றளவு, , விளையாடும் இடம், பெரிய அளவு,மொட்டை மாடி, மரங்களின் மேல் பரப்பு, காய்ந்த மரம்,ரப்பர், பிளாஸ்டிக், உலர்ந்த தோல், கிடங்கு, காபி கொட்டை, கயிறு, பாம்புகளின் இறைவன்,ஊழல், விபத்துகள், இரைப்பை தொல்லைகள், பாம்பின் வாய்.
கேதுதாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், ஆசனவாய், தாடி, மாடி படிக்கட்டு, புகைபோக்கி, பின் வாசல், குறுகிய சந்து (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம்,நூல், மது, செயல் தடை, இரகசிய நடவடிக்கை, தீர்வு, மண் பானை, காவி துணி, பிரம்மா,சமுத்திரம், மருத்துவமனைகள், பிரார்த்தனை கூடங்கள், மரங்களின் வேர், பாம்பின் வால், கயிறு, சங்கிலி, ஈனைய வலை, சாக்கடை, காய்ந்த புல், மூலிகைகள், யானை உடற்பகுதி, ஆலமரம், எழுதுதல், கொடி, இரகசியம், சர்ச்சை,
வழக்கு, தடைகள்.