Thursday, 28 January 2016

ஜாதகத்தில் வீடுகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்

லக்கின பாவம்

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

மூன்றாம் பாவம்

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
  • 4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
  • குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
  • புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஆறாம் பாவம்

ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாம் பாவம்

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

பத்தாம் பாவம்

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினோராம் பாவம்

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.

Wednesday, 27 January 2016

இராசிக்கு ஏற்பத்தான் வாய்ப்பாள் மனைவி

ஓர் ஆணின் ஜாதகத்தில் அவன் பிறந்த இலக்கினத்துக்கு ஏழாமிடத்து இராசி எதுவென்று பார்க்கவேண்டும் அந்த ஏழாவதுஇராசியானது இராசிச் சக்கரத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுள் எந்த ராசியாக அமைகிறதோ அந்த இராசிக்கு ஏற்பத்தான் அந்த ஜாதகருக்கு வாய்க்கும் மனைவியின் அழகும் குணபாவங்களும் ஒழுக்கமும் அமைந்திருக்கும்

       உதாரணமாக நீங்கள் எடுத்துக்கொண்ட ஆணின் ஜாதக இலக்கினம் துலாமாக இருந்தால் அதற்கு ஏழாவது வீடு அல்லது ஸ்தானம் மேஷஇராசியாகும் இந்த மேஷ இராசிதான் துலாஇலக்கினகாரருக்கு உரிய களத்திரஸ்தானமாகும் இந்த மேஷ இராசிக்கு அதிபதி செவ்வாய் எனவே செவ்வாயே களத்திரபாவாதியாகவும் ஏழாதிபன் என்றும் வழங்குவார்கள் ஆகவே ஜாதகரின் இலக்கினத்துக்கு ஏழாவது ஸ்தானமாக அமைந்திருப்பது
மேஷ இராசியானால்
அந்த ஜாதகரின் மனைவி சபல சித்தமுள்ளவளாகவும் பணத்தின் மீது அதிகப்பிரியமுள்ளவளாகவும் பணம் சேர்ப்பதிலேயே அக்கறையுள்ளவளாகவும் இருப்பாள் கணவனிடத்திலும் பணத்தையே தான்பெரிதும் விரும்புவாள் எவையேனும் யாசிக்கும் குணமுள்ளவளாகவும் இருப்பாள்

ரிஷப இராசியானால்
மனைவியாக வாய்த்தவள் ஜாதகருக்கு சம்மாக ஒத்திருப்பாள்பணிவுள்ளவளாகவும் இருப்பாள் மென்மையும் இனிமையுமாகப் பேசுபவளாகவும் மிகவும் சாந்தகுணமுள்ளவளாகவும் அச்சமும் பெரியோர்களிடத்திலும் அந்தணர்களிடத்திலும் தெய்வங்களிடத்திலும் பக்தியுள்ளவளாகவும் இருப்பாள்

மிதுன இராசியானால்
பணத்துடன் கூடியவளாகவே மனைவி அமைவாள் நல்ல ரூபவதியாகவும் நற்குணமுள்ளவளாகவும் நல்ல நடத்தையுள்ளவளாகவும் அடக்கமான அலங்காரம் செய்து கொள்பவளாகவும் கஷ்ட குணமும் செயலும்பேச்சும் அற்றவளாகவும் விளங்குவாள்

கடக இராசியானால்
கணவனின் மனத்திற்கு பிரியமானவளாகவும் சகல செளபாக்கியங்களுடன் நற்குணமுள்ளவளாகவும் திகழ்வாள் தோஷம் எதுவும் இல்லாதவளாகவும் யாவருடனும் இனிமையாக பழகும் பண்புள்ளவளாகவும் அமைவாள் இந்த இராசி ஏழாமிடமாக அமையும் ஜாதகருக்கு ஒரே மனைவிதான் இருப்பாள் என்று சொல்வதிற்கில்லை ஏனென்றால் ஒரே களத்திரமாக இராது என்பது விதி

சிம்ம இராசியானால்
எதிலும் தீவிரமான சுபாவமுள்ளவளாகவும் சபலபுத்தியுள்ளவளாகவும் மிகவும் தைரியமுள்ளவளாகவும் திகழ்வாள் தாழ்ந்த நிலையிலிருப்பவளைப் போல் வேஷம் போடுவாள் பிறர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் ஆசையுள்ளவள் கடுமைக்குரலும் இளைத்த உடல்வாகும் குறைந்த புத்திரப்பேறும் உடையவளாக இருப்பாள்
கன்னி இராசியானால்
அமைகின்ற மனைவி அழகான உடற்கட்டுடையவள் பெரும்பாலும் புத்திரப்பேறு இருக்காது இவள் செளபாக்கியம் போபம் பொருட்செலவு பயம் இவற்றுடன் கூடியவளாகவும் இருப்பாள் யாரிடமும் அன்பும் பிரியமுமாகப் பேசுவாள் சாமர்த்தியம்மிக்கவள்

துலாம் இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி நல்ல சிறப்பிற்குரிய அங்கமற்றவளாகவும் பற்பல விதமான மனநாட்டங்களையும் இச்சைகளையும் கொண்டவளாகவும் புண்ணியச் செயல்களில் பற்றுள்ளவளாகவும் தானதர்ம்ம் செய்வதில் விருப்பமுள்ளவளாகவும் மிகுதியான புத்திர யோகமுள்ளவளாகவும் பெருத்த அங்கமுள்ளவளாகவும் இருப்பாள் பொதுவாக இப்படியுள்ள ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரங்கள் அமையும்

விருச்சிக இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி கஞ்சத்தனமான கருமியாகவும் எதையும் தீர யோசித்து ஒரே முயற்சியிலேயே எந்தக் காரியத்திலும் வெற்றியடையக் கூடியவளாகவும் பற்பல தெளர்பாக்கிய தோஷங்களுடனும் கூடியவளாக இருப்பாள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரம் இத்தகைய ஜாதகருக்கு அமையும்

தனுசு இராசியானால்
அவருக்கு மனைவியாக அமைபவள் புருஷ சரீரம் படைத்தவளாகவும் பக்தி நியாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாதவளாகவும் நிஷ்டூரமான குணமுள்ளவளாகவும் இனிமையாகப் பழகத் தெரியாதவளாகவும் புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் இல்லாதவளாகவும் இருப்பாள்

மகர இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி பார்ப்பவர்களுக்கு தர்ம நியாயம் தவறாதவளைப் போல நடிப்பவள் நல்ல பெண்ணுடல் கொண்டவள் கற்புள்ளவளாகவும் அழகிய குணபாவமுள்ளவளாகவும் நல்ல புத்திர்ர்களைப் பெற்றுத் தருபவளாகவும் இருப்பாள்

கும்ப இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி நிலையான புத்தியுள்ளவளாகவும் கணவனுக்குப் பணிவிடைகளைச் செய்வதில் பற்றுள்ளவளாகவும் தேவர் மற்றும் பிராமணபக்தியுள்ளவளாகவும் தர்ம்ம் செய்வதில் விருப்பமுள்ளவளைப் போல வெளிவேஷம் போடுபவளாகவும் சகலவிதமான சுகங்களையும் தருபவளாகவும் இருப்பாள்

மீன இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி விகாரமானவளாகவும் கெட்ட புத்தியுள்ளவளாகவும் சுயதர்ம்ம் நல்லநடத்தை நல்ல ஒழுக்கம் ஆகியவை இல்லாதவளாகவும் அன்பில்லாதவளாகவும் அடிக்கடி சண்டையிடும் குணமுள்ளவளாகவும் விளங்குவாள் இப்படித்தான் ஒவ்வோர் ஆணுக்கும் அவரது களத்திரபாவம் அமைந்துள்ள இராசிப்படிதான் மனைவி அமைவாளோ தவிர மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரமாக மட்டுமே இருப்பதில்லை சிலருக்கு இறைவன் கொடுத்த சாபத்தைப் போலவும் மனைவி அமைவதுண்டு ஆனால் அது திருமணம் செய்து கொள்ளும் போது தெரியாமற்போவது விதியின் வலிமையாகும் இதைத் தெளிவுபடுத்துவது ஜோதிட சாஸ்திரமாகும் ஒருவருக்கு மனைவி அமைவது அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானதிபதி இருக்குமிடத்தை பொறுத்தும் மாறுதல் அடையக்கூடும் அதன் விளக்கத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் இந்த விதிகள் இலக்கினத்துக்கும் இராசிக்கும் பொருத்தமானவை என்றாலும் இலக்கினத்துக்கு ஏழாவது பாவந்தான் களத்திர பாவமாகையால் கோட்சார பலனைப் பார்ப்பது நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கினத்தை அடிப்படையாக்க் கொண்டு தான் ஜாதகத்தைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் பலன்களையும் நிச்சயிக்க வேண்டும் இதில் குழப்பம் அடைந்துவிடக்கூடாது.

Wednesday, 20 January 2016

கிரகங்களின் பண்புகள் - காரகத்துவம்

கிரகங்கள் காரகத்துவம்
சூரியன்தந்தை, மகன், அரசன், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி, முதல்வர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மா, கடவுள், பெயர் & புகழ், வெளிச்சம், தலைநகரம், அதிகாரம், அரண்மனை, வலது கண்,வலது பக்கம், ஹவுஸ் வலது பக்க ஜன்னல்.
சந்திரன்அம்மா, பெண், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், மளிகை கடை, மருத்துவ கடை, மார்பகம், வயிறு, சிறுநீர் பாதை, இடது கண், வீட்டின் இடது பக்க ஜன்னல்,குளியல் அறை & மலசலம் கழிக்கும் இடம், தண்ணீரால் நிரம்பிய இடங்கள், கடல், ஏரி, ஆறு, மனம், இடப்பெயர்ச்சி, இடம் மாற்றம், குங்குமம், கலை, திரவ பொருட்கள், உணவு பொருட்கள், மேகங்கள், மழை,திருடன், விபச்சாரம், செய்தி, இயக்கம், ஒளி,திருட்டுத்தனமான செயல்பாடுகள், ஜோதிடம்,வேதங்கள், மருத்துவம், துணிகள்.
செவ்வாய் (குஜன்)2ம் இளைய சகோதரர், கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, ஆற்றல் மீட்டர், மின்மாற்றி, மின் மோட்டார்ஸ், ஹீட்டர்கள், கற்கள், தூண்கள், வீட்டு விட்டங்கள், பூமி, மலைத் தொடர், மலை, பாறைகள், சுரங்கங்கள், உலோகங்கள், ஈட்டி, தோட்டாக்கள், எதிரி, வன் பொருள், கத்தரிக்கோல், முக்கோண வடிவம், சக்தி, ஊசி, கத்தி, முள், அம்பு, இயந்திரங்கள், ஆயுதங்கள், விவசாயம்.
புதன்மாமா, மாமனார், 3ம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், பாய் நண்பர், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்பு, கணக்காளர், கணக்காய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடம், பெயிண்டர், வழக்கறிஞர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர்,விஞ்ஞானிகள், ஆராய்ச்சி பொறியாளர், மளிகை கடை, கைகள், கழுத்து, தோள், தோல், நெற்றி,
மொழி, தொண்டை, சுவர் பிளாஸ்டரிங், பார்வையாளர் அறை, படிக்கும் அறை, கார்டன், பூங்கா, நிலம், கல்வி, வர்த்தகம், அழகு, புதைசேற்று சுவர்கள், பயிர்கள், இலைகள், தகவல், பதிவு, பேச்சு, சொற்றிரம், அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள், ராஜதந்திரம், தந்திரம், மென்மையான விஷயங்கள், மண்,
வியாழன் (குரு)ஜீவகாரகர் (சொந்தம்), தொப்பை (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு,தொடை, பாதம், பறிப்பு,வீட்டின் கடவுள் அறை, நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், தேன், கடவுள், மாடு, கௌரவம்,பெருமரியாதை, மரியாதை,உண்மை,பொறுமை, அடக்கம்.
சுக்கிரன்சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி,விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடல், நகை கடை, பணக் கடன், மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், சுந்தரமானது, இனிப்பு, போதை, அழகான தோற்றம், அழகு, இரகசிய விடயங்கள், நடனம் அரங்கு, சினிமா திரையரங்கு, மகளிர் குழு.
சனிமூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் வேலைக்காரன், தொழில்,கேரியர், வேலை, சின், பாதம், பிட்டம், ஆசனவாய்,முட்டிகள், முழங்கால், செரிமானபை, வீட்டின் சேமிப்பு அறை, டைனிங் ஹால்,சாலை,காற்று சம்பந்தமான நோய்கள்,உல்லன் துணிகள்,இரும்பு,ஈயம், சுழல் காற்று, புயல், செங்கல் சூளையாளர், சூதாட்டம்,எண்ணெய் சுரங்கம்.
ராகுதந்தைவழி தாத்தா, வெளிநாட்டு பயணங்கள்,மின்னணுவியல், வான் பயணவியல்,நடிகர், புகைப்படம் எடுத்தல், சிபிஐ அதிகாரி,பாதுகாப்பு, கடத்தல், திருடன், வாய், தலை, காது,உதடுகள், குடல், மலக்குடல், விரைகள், முதன்மை நுழைவாயில்,பழைய வீடு, பாழடைந்த சுவர்,, சுவற்றில் விரிசல், இருண்ட அறை, பெரிய மண்டபம், கோபுரம்,முட்டை வடிவம், தனிமையான பகுதி,பரந்த சாலை, சுற்று வட்டம்,வட்ட வடிவம், இருள்,உடல்நலத்தை கவனிப்பு,மாயத்தோற்றம், மாயை, நிழல், குடை, சக்கர வடிவம்,சக்கரத்தின் சுற்றளவு, , விளையாடும் இடம், பெரிய அளவு,மொட்டை மாடி, மரங்களின் மேல் பரப்பு, காய்ந்த மரம்,ரப்பர், பிளாஸ்டிக், உலர்ந்த தோல், கிடங்கு, காபி கொட்டை, கயிறு, பாம்புகளின் இறைவன்,ஊழல், விபத்துகள், இரைப்பை தொல்லைகள், பாம்பின் வாய்.
கேதுதாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், ஆசனவாய், தாடி, மாடி படிக்கட்டு, புகைபோக்கி, பின் வாசல், குறுகிய சந்து (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம்,நூல், மது, செயல் தடை, இரகசிய நடவடிக்கை, தீர்வு, மண் பானை, காவி துணி, பிரம்மா,சமுத்திரம், மருத்துவமனைகள், பிரார்த்தனை கூடங்கள், மரங்களின் வேர், பாம்பின் வால், கயிறு, சங்கிலி, ஈனைய வலை, சாக்கடை, காய்ந்த புல், மூலிகைகள், யானை உடற்பகுதி, ஆலமரம், எழுதுதல், கொடி, இரகசியம், சர்ச்சை,
வழக்கு, தடைகள்.