Wednesday, 19 July 2017

தோல் நோய் நீங்கனுமா? யோகினி ஏகாதசி விரதம் இருங்க!

 
       அஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம். இந்த மாதம் ஆன்மிக மாதமாக எங்கெங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலமாக இருக்கும். அம்மன் கோவில்களில் பல்வேறு விசேஷ வைபவங்கள் நடைபெறும். இன்று அனைத்து வைஷ்ணவ தலங்களிலும் யோகினி ஏகாதசி விரதமும் ஸ்ரீ மகா விஷ்னுவிற்க்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை.பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான். ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள். அவர் "யோகினி ஏகாதசி''யை அவர்களுக்கு உபதேசித்தார். 
அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான். தொழுநோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்: தொழுநோய்கான காரக கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையை கொண்டு அறியலாம். தொழுநோய் தோல் நோய் வகையை சார்ந்தது என்பதால் புதனை காரக கிரகமாக கருதினாலும் தொழுநோய்க்கு முக்கிய காரக கிரகமாக கூறப்படுவது ராஜ கிரகமான சூரியனே ஆகும். என்றாலும் தொழுநோயின் அடிப்படை காரணங்கள், அறிகுறிகள் விளைவுகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அனைத்து கிரகங்களுமே காரகமாகிவிடுகின்றனர். 
 
தொழுநோய்க்கான காரக கிரகங்கள் 
சூரியன்:
 கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்க்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 சந்திரன்:
 நமது ஜாதகத்தில் லக்கினத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநாய் சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார். 
 செவ்வாய்: 
காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோயான தொழுநாய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.
 புதன்: 
அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாருகளுக்கு புதனே காரகமாவார். தொழுநோயாளிகளுக்கு தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துபோகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
 குரு:
 குருவினால் நேரடியாக பாதிப்புகள் இல்லையென்றாலும் தொழுநோயை கர்ம வினையினால் ஏற்படும் நோய் என்றே ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையை கொண்டு கர்ம வினையை அறிந்துக்கொள்ள முடியும். மேலும் லக்ன பாவம் மற்றும் குருவின் நிலை ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்கிறது. நோய் எதிர்ப்பு குறைந்தவர்களையே தொழுநோய் பீடிக்கிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
 சுக்கிரன்: 
 தொழுநோய் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிரார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்து தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிறங்கு, கொப்புளங்கள் என பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்க்கு சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார். 
சனி: 
உடம்பின் கட்டமைப்பின் காரகர் சனியாவார். மேலும் தொழுநோய் ஏற்படும்போது உடலுருப்புகள் செயலிழப்பு, வாதத்தன்மை, அங்கஹீனம் ஆகியவை ஏற்படுவது சனியின் காரகத்தன்மை ஆகும். 
 
ராகு/கேது:
 சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோயுக்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுன்னுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்க்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம விணைகளை ஜாதகத்திலு தெரிவித்து அதை அனுபவிக்க செய்பவர்களும் இவர்களே! 
 
 தொழுநோய் மற்றும் தோல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்: 1. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது. 2. சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது. 3.லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது. 4. செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது. 5.சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது. 6. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்க்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது 7. சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது. 8. லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமோ அல்லது சந்திரனும் செவ்வாயுமோ எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வென்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏறபடும் 9. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். 10, லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது. 11. குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது. 12.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது. 13.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது. 14. பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது. 15. சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது 16. பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது. 
 
குறிப்பு: மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். தொழுநோய் ஏற்பட இந்த கிரக சேர்க்கைகளில் அதிகப்படியாற சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Monday, 17 July 2017

ராகு கேது பெயர்ச்சி :

Saturday, 3 June 2017

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையைப் பொருத்து அன்பான வாழ்க்கைத்துணை அமையும்

      சுக்கிரன் களத்திரகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையைப் பொருத்து அவருக்கு அழகான, அன்பான வாழ்க்கைத்துணை அமையும் என்கிறது ஜோதிடம். இன்றைய ஹீரோ சுக்கிரன்தான் ஒருவரின் வாழ்க்கை துணை எப்படி இருப்பார் என்பதை உணர்த்துகிறார். கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு. Lord Sukhra help of luxuries and love! அசுர குரு சுக்கிரன் உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்கும், அமோகமான வாழ்விற்கும் காரணகர்த்தா. காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு,வியாபாரம், நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். 
 
ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார். லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும். ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்:
 
 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றப்பொழிவை தரும். அனைவரும் கவர்ந்து இழுக்கும் தோற்றம் இருக்கும். ஆண்களாக இருந்தால் பெண்களாலும் பெண்களாக இருந்தால் ஆண்களாகவும் ஈர்க்கப்படுவார்கள். எதிர்பாலினரிடம் நல்ல நட்பு இருக்கும். துணைவியார் அழகாக அமைவார்.
 
 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும். தனவரவுகள் நன்றாக இருக்கும். நல்ல அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்பத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும். Lord Sukhra help of luxuries and love!
 
 3 ஆம் வீட்டில் இருந்தால் சிறிய தொலைவு பயணம் அடிக்கடி நடைபெறும் கடித போக்குவரத்து பெண்களிடத்தில் இருந்து வரும். இளைய சகோதரிகள் அதிகம் பேர் இருப்பார்கள். சிற்றின்ப சுகத்தில் மனது அலைபாயும்.
 
 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல ஆடம்பரமான வீடு அமையும். வாகனம் அமையும். வாகனத்துறையில் பணிபுரியலாம் அல்லது டிராவல்ஸ் தொழில் நடத்தலாம். உற்றார் உறவினர் மூலம் நல்ல உறவு ஏற்படும். கற்பனை வளம் இருக்கும்.
 
 5 ஆம் வீட்டில் இருந்தால் கலைகளில் ஈடுபட்டு வாழ்க்கை வசதிகளை பெறவைப்பார். நல்ல கல்வி ,கற்பனை வளம் இருக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய வைப்பார். திடீர் வருமானத்திற்கு வாய்ப்பு உண்டு. 
 
 6 ஆம் வீட்டில் இருந்தால் செல்வ வளம் குன்றும். எதிரிகள் தொந்தரவு இருக்கும். பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். மர்ம பாகங்களில் நோய் வரும். பெண்களால் ஏமாற்றப்படுவார். சண்டை என்று வந்தால் முதலில் பெண்கள் வழியில் தான் ஆரம்பம் ஆகும். 
 
7 ஆம் வீட்டில் இருந்தால் அழகான தோற்றத்தை உருவாக்குவார். அழகான மனைவி அமையும். காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல பணக்காரராக இருக்கவைப்பார். பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் ஏழில் கெட்டால் சுக்கிர தோஷத்தை ஏற்படுத்துவார். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கும்.
 
 8 ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும் எட்டாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டை சுக்கிரன் பார்ப்பதால் தன வரவு நன்றாக இருக்கும் ஆனால் திருமணத்திற்க்கு தோஷத்தை ஏற்படுத்துவார். 
 
9 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வ பக்தியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். உயர்கல்வியில் சிறந்து விளங்குவார். பணவரவுகள் நன்றாக இருக்கும். தந்தைக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு நல்லவிதத்தில் இருக்கும். மனைவி மூலம் நல்லது நடக்கும். மொத்தத்தில் வசதியான வாழ்க்கை வாழ சுக்கிரன் துணைபுரிவார். 
 
10 ஆம் வீட்டில் இருந்தால் கலைதுறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். கலைதுறையில் தொழில் தொடங்கலாம். பெண்களால் வருமானம் இருக்கும். கலைதுறையில் போட்டிகளில் சமாளித்து முன்னேறி வர சுக்கிரன் துணைபுரிவார். நண்பர்களால் லாபம் உண்டு. 
 
 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் ஏற்படும் மூத்த சகோதரிகளால் நன்மை ஏற்படும். லாபம் பன்மடங்காக உயரும். பெண்களால் லாபம் ஏற்படும் பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கலைதுறை மூலம் வருமானம் பெருகும். 
 
12 ஆம் வீட்டில் இருந்தால் பெண்கள் மூலம் பொருள் இழப்பு ஏற்படும். தொழிலில் முன்னேறுவது கடினம். பணவரவுகள் இருக்கும் ஆனால் பணத்தை போகத்திற்க்கு அதிக செலவு செய்வார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று மனைவி பேச்சை கேட்பார்கள். கஞ்சனூர் சென்று நீல ஆடை அணிந்து வெண்தாமரை மலர்களால் சுக்கிர பகவானையும் பிரார்த்திக்க வேண்டும். இதனால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். சுக்கிர தோசம் நீங்க அனைவரும் வழிபட வேண்டிய தலமாகும்.