Saturday, 3 June 2017

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையைப் பொருத்து அன்பான வாழ்க்கைத்துணை அமையும்

      சுக்கிரன் களத்திரகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையைப் பொருத்து அவருக்கு அழகான, அன்பான வாழ்க்கைத்துணை அமையும் என்கிறது ஜோதிடம். இன்றைய ஹீரோ சுக்கிரன்தான் ஒருவரின் வாழ்க்கை துணை எப்படி இருப்பார் என்பதை உணர்த்துகிறார். கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு. Lord Sukhra help of luxuries and love! அசுர குரு சுக்கிரன் உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்கும், அமோகமான வாழ்விற்கும் காரணகர்த்தா. காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு,வியாபாரம், நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். 
 
ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார். லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும். ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்:
 
 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றப்பொழிவை தரும். அனைவரும் கவர்ந்து இழுக்கும் தோற்றம் இருக்கும். ஆண்களாக இருந்தால் பெண்களாலும் பெண்களாக இருந்தால் ஆண்களாகவும் ஈர்க்கப்படுவார்கள். எதிர்பாலினரிடம் நல்ல நட்பு இருக்கும். துணைவியார் அழகாக அமைவார்.
 
 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சு திறமை இருக்கும். தனவரவுகள் நன்றாக இருக்கும். நல்ல அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்பத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும். Lord Sukhra help of luxuries and love!
 
 3 ஆம் வீட்டில் இருந்தால் சிறிய தொலைவு பயணம் அடிக்கடி நடைபெறும் கடித போக்குவரத்து பெண்களிடத்தில் இருந்து வரும். இளைய சகோதரிகள் அதிகம் பேர் இருப்பார்கள். சிற்றின்ப சுகத்தில் மனது அலைபாயும்.
 
 4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல ஆடம்பரமான வீடு அமையும். வாகனம் அமையும். வாகனத்துறையில் பணிபுரியலாம் அல்லது டிராவல்ஸ் தொழில் நடத்தலாம். உற்றார் உறவினர் மூலம் நல்ல உறவு ஏற்படும். கற்பனை வளம் இருக்கும்.
 
 5 ஆம் வீட்டில் இருந்தால் கலைகளில் ஈடுபட்டு வாழ்க்கை வசதிகளை பெறவைப்பார். நல்ல கல்வி ,கற்பனை வளம் இருக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய வைப்பார். திடீர் வருமானத்திற்கு வாய்ப்பு உண்டு. 
 
 6 ஆம் வீட்டில் இருந்தால் செல்வ வளம் குன்றும். எதிரிகள் தொந்தரவு இருக்கும். பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். மர்ம பாகங்களில் நோய் வரும். பெண்களால் ஏமாற்றப்படுவார். சண்டை என்று வந்தால் முதலில் பெண்கள் வழியில் தான் ஆரம்பம் ஆகும். 
 
7 ஆம் வீட்டில் இருந்தால் அழகான தோற்றத்தை உருவாக்குவார். அழகான மனைவி அமையும். காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல பணக்காரராக இருக்கவைப்பார். பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் ஏழில் கெட்டால் சுக்கிர தோஷத்தை ஏற்படுத்துவார். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கும்.
 
 8 ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் இருக்கும் எட்டாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டை சுக்கிரன் பார்ப்பதால் தன வரவு நன்றாக இருக்கும் ஆனால் திருமணத்திற்க்கு தோஷத்தை ஏற்படுத்துவார். 
 
9 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வ பக்தியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். உயர்கல்வியில் சிறந்து விளங்குவார். பணவரவுகள் நன்றாக இருக்கும். தந்தைக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு நல்லவிதத்தில் இருக்கும். மனைவி மூலம் நல்லது நடக்கும். மொத்தத்தில் வசதியான வாழ்க்கை வாழ சுக்கிரன் துணைபுரிவார். 
 
10 ஆம் வீட்டில் இருந்தால் கலைதுறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். கலைதுறையில் தொழில் தொடங்கலாம். பெண்களால் வருமானம் இருக்கும். கலைதுறையில் போட்டிகளில் சமாளித்து முன்னேறி வர சுக்கிரன் துணைபுரிவார். நண்பர்களால் லாபம் உண்டு. 
 
 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் ஏற்படும் மூத்த சகோதரிகளால் நன்மை ஏற்படும். லாபம் பன்மடங்காக உயரும். பெண்களால் லாபம் ஏற்படும் பல பெண்களிடத்தில் தொடர்பு ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கலைதுறை மூலம் வருமானம் பெருகும். 
 
12 ஆம் வீட்டில் இருந்தால் பெண்கள் மூலம் பொருள் இழப்பு ஏற்படும். தொழிலில் முன்னேறுவது கடினம். பணவரவுகள் இருக்கும் ஆனால் பணத்தை போகத்திற்க்கு அதிக செலவு செய்வார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று மனைவி பேச்சை கேட்பார்கள். கஞ்சனூர் சென்று நீல ஆடை அணிந்து வெண்தாமரை மலர்களால் சுக்கிர பகவானையும் பிரார்த்திக்க வேண்டும். இதனால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். சுக்கிர தோசம் நீங்க அனைவரும் வழிபட வேண்டிய தலமாகும்.