Thursday, 19 November 2015

ஜாதகத்தில் சந்திரன் எதையெல்லாம் குறிக்கும்..?

சந்திரன்  காரகத்துவம்;


சந்திரன் -  பெண்   கிரகம்  -  பெண்    தெய்வம்   [பார்வதி]   - அம்பிகை    -  தாய்   பெண்   -   தாய்  வர்க்கம்    மாமியார்   -  தாய்மை   உணர்வு     -  மனம்   -   சந்தோஷம்   - அன்பு   - சாந்தம்   கீர்த்தி – ஸ்தீரிலாபம்  -  இரவு  ஏமாற்றுதல்   -   ஏமாறுதல்   -   மோசடி   வேலை    திருட்டு   -  ஒழுக்க   கேடு    -   அபவாதம்   -  கள்ள    காதல்    சலனப்புத்தி   மாற்றம்   -   நேர்மையற்ற    முறை   கெட்டபெயர்    -  கலைகள்   -  அடிக்கடி  பிரயானம்    ஜலம்  -  பெண்    சந்த்தி   -   நல்   முத்து   -  உணவுப்  பொருள்   -  சுப   போஜனம்   -   சரீர    சுகம்   -ரூபம்    அறிவு    விவேகம்    ராஜஸ்ன்மானம்     -    சம்பத்துண்டாதல்      கருணை   --  

ஆலயம்  -  சங்கு  -  ஒலி    அதிர்வு     [வைப்ரேசன்]   - அமைதி    -  மிருதுவானவை   -  பயிர்     திரவப்  பொருள்     -  பெட்ரோல்   -  டீசல்    உணவுப்   பொருள்      பலரசம்     -  ரசவர்க்கம்   ரசம்   உபாசனை  - இந்திரிய     புஷ்டியுண்ட்தல்    -   இலை   தளிர் – துணி – ஜவுளி    - குங்குமம்   [சிவப்பு   பவுடர்] மூலிகைகள்   -   கலப்படம்  -  முத்து    தேன்   -  வெண் தாமரை   - வெண் குடை   - சுகந்தம்   வஸ்திரம்   வெண்பட்டு    -  பவுண்   காசு      வெள்ளி  ரூபாய் -   வெண்கலம்  -வெண்ணெய்    நெய்   -   தயிர்   பாலாடை    -  தித்திப்பு   -வெகு   இனிமை   தேகப்  பயிற்சி   -  சில   நாள்  பெருத்தல் மந்திராலேசனை   -  மந்திர        சாஸ்திரம்    சாங்கிய    சாஸ்திரம்  -  உப்பு   கஷீரம்   - வெளிநாட்டி   பயணம் – பொது  மக்களை     கவருதல்   -  சோழி   ராஜ   புருஷ    சினேகம்    நன்னடத்தை  -  நன்முகம்   -பூர்ணபலம்   -  சிலவு  -  கடன்   -   குளீர்ச்சி     மேகம்     -  மழை   கெமிஸ்ட்ரி   -    மனோத்துவம்     -  புஷ்டி    -  வாசனை    

-பிராமண       சக்தி      பயங்கொள்ளித்தனம்   -  தாழ்வு   மனப்பான்மை  சலன்    சித்தம்   -   சிக்கன்   மனப்பான்மை   கிரஹித்துக்  கொள்ளும்   சக்தி  முன்னெச்சரிக்கை   -   வெள்ளல்லி   -0  சாம்பிராணி   -  சப்பிரம்  -  மருந்து   -   தாம்பூலம்    நிறம்   வெள்ளை    சந்திரகாந்த    நீலம்   -   தாலாட்டுதல்    - கொஞ்சுதல்   -  முத்தமிடுதல்   முதலியன    சுண்ணாம்பு   -  நாடகர்   -  காசிமாலை    -  கடுதாசி   -  கண்ணாடி   -  தாசி  -   செங்கல்  -  கடுக்கன்     அலங்காரம்    -  சந்தனம்   அஸ்வம்    -  மெத்தை  வீடு   -  சுவாமி   படங்கள்   -  உவர்மண்   காதிலணியும்    ஆபரணம்   -  பட்டை   தீட்டிய    ரத்தினங்கள்   பதித்த    ஆபரணம்  -  நாகரீகம்    - நகைப்பு  -  கன்னிகை    விசித்திரம்   - களைபருவம்   -  கன்னிபருவம்  -  உபசாரம்   -  மாமிசம்  -  பட்டு   -அழகு   விக்கிரகம்.
மொழி  ;    தமிழ்
திசை  ;   வடமேற்கு
பருவகாலம்  ;    மழை   காலம்
வடிவம்   ;    சதுரம்    -  வட்ட  வடிவம்
சுவை  ;   உப்பு  -  சிலர்   தித்திப்பு   பிரியர்
குணம்  ;   சத்வ   குணம்   -சாந்த   அன்னம்   புசிப்பர்
சொரூபம்    ;   வெண்மையான   நிறம்   -ஒற்றை   நாடி   வாய்ந்த   மேனி   -  உருண்டை   வடிவம்   -மேதாவி    மெல்லிய     இனிய   பேச்சு   -  அழகான    பார்வை  -  விவேகம்   மிகுந்தவர்  -   வாயு      சிலேஷ்ம    தேகம்   அமைந்தவ்ந்ர்.
உறவு   முறை  ;   தாய்   -  அக்காள்   -அண்ணி-   திருமணமுடிந்த   பெண்ணுக்கு  மாமியார்   தாய்   மாமன்   மனைவி.
இடம் ;  குளியல்  அறை -  ஏரி   -குட்டை –கிணறு     -ஆறு   -கால்வாய்-  வண்ணான்    துறை   பார்வதி   கோயில்   - சமையல்  அறை  -  கழிப்பிடம்   -  நீர் உள்ள   தொட்டி    நீச்சல்  குளம்  -  மது   பானம்   வடிக்கும்   இடம்   -குளிர்   சாதனை   வசதியுள்ள   இடங்கள்   புண்ணிய   ஸ்தலங்கள்   -  நந்தவனம்   நதி  -   குளம்  -கடல்   -கிணறு   -ஏரி  -மீன்   சந்தை   காய்கனி   சந்தை.
கல்வி ;   கெமிஸ்ட்ரி-   ஓட்டல்   நிர்வாகம்   -உள  நூல்   சார்ந்த   கல்வி   -  ஜோதிடம்.

தொழில் ; பால்  வியாபாரி -  மில்க்  பூத் –பால்காரி   -தண்ணீர்  விற்பவர்  -பழரசம்   விற்பவர்   விவாசாயி  -மருத்துவச்சி  - நர்ஸ்   -  வண்ணான்   டிரை    கிளியன்  -  கால நடை    தீவன  விற்பனையாலர்   கம்பவுண்டர்  -  படகோட்டி   -  மாலுமி  -  கப்பல்  ஒட்டி   கப்பலில்  பணி   - கடல்  கடந்து  வெளி  நாட்டில் நாட்டில்   தொழில்   -  மீன்  மற்றும்   மலர்    வியாபாரம்   -   தகவல்   கொடுப்பவர்  -  டிரவெல்   ஏஜென்ட்    மருந்துக் கடை -  ஒட்டல்   ஓட்டல்   சப்ளையர்   -  உணவு  உற்பத்தி   -   குடிநீர்   வடிகால்  வாரியத்   துறை       மதுபானக்   கடை     -  ஜோதிடம்   -  கதாசிரியர்  -  மத  போதகர்   -   முத்து   வியாபாரி   -  உப்பு   வியாபாரம்    காய்கறி   கடை    -  சமையல்      ஆயில்    விற்பனை   -  மளிகை  கடை   அரிசி   வியாபாரம்  -  சில்லரை    வியாபாரம்    -   


வட்டிக்  கடை  -  ஜலபதார்த்தம்     -   நகை வியாபாரம்.
வியாதி ;   ஜலதோசம்   -  இரத்த  குறைபாடு  -  காக்காய்     வலிப்பு    -  கண்  பாதிப்பு   இன்புழுஷா    -  மார்பு    சளி    -  மன  நோய்     -  அம்மை     -  தோல்    வியாதி  -  அடிக்கடி    வேர்த்தல்     -  தைராய்டு     -   மோக   நோய்  ஈரல்    நோய்    -  சளி  -  இருமல்  -  இருமல்   காரணமாக    காய்ச்சல்   -  காச  நோய்   -  மகோதரம்    சிலேஷ்மம்    பாரிச  வாயு    -   சீதளம்   ஸ்திரீகளுக்கு    ஸ்தனகர்ப்பாசய      சம்பந்தமான   நோய்கள்    -  சில    நரம்பு    வியாதிகள்   -  வலிப்பு    முதலிய    நோய்கள்    -  தனித்தப்பிரம்மை    -  சித்த   சுவாதீனமின்மை   -  சுரம்   பெண்   கூடிய      ரோகம்.
மாரக   நோய்  ;   காலரா

விலங்கு   மற்றும்   பறவைகள் ;  ஊர்ந்து   செல்லும்    விலங்குகள்   -  நரி   -  முயல்    -  குதிரை    நண்டு   கொக்கு    நீர்கோழி    -  மீன்  கொத்திப்  பறவை
தாவரங்கள்    ;   முருங்கை    மரம்   -  நெல்   பயிர்     -  வாழை  மரம்   -  கரும்பு  -  காய்கறி   செடிகள்   -  மூலிகை    பயிர்கள்    -  எள்ளு   -  தைலமரம்   -  சவுக்கு  மரம்  -  மாமரம்    நெல்லி   மரம்    -  அடர்ந்த   விருகூம்   புஷ்பங்கள்     -  முள்ளங்கி  -   வெள்ளிரிக்காய்   -   காளான்    தேயிலை
வீட்டு   உபயோக   பொருட்கள்  ;    நீர்   சேமிக்கும்   பாத்திரம்   -  சோப்பு   -  கெரசின்    ஐஸ்   பெட்டி    துவைக்கும்   மிஷின்      -  குளிர்  சாதனப் பெட்டி  -  சமைக்கும்   பாத்திரம்   -  வாட்டர்   டேப்    -  கண்ணாடி   கடிகாரம்   -   மெத்தை    -  சலவைக்  கட்டி.
தெய்வம் ; லலிதா   ராஜ    ராஜேஸ்வரி   -  பார்வதி   -  சக்தி.   அதிதேவதை  ;   ஜலம்
வாஸ்து  ; வடமேற்கு   -  இடது   பக்க  ஜன்னல்  -  வீட்டின்    முன்   இடது  புற   அறை   குடும்பத்தில்     உள்ள   பெண்    உறுப்பினர்கள்    -  குளியல்  அறை-  கழிப்பிடம்   -  தண்ணீர்   தொட்டி   -  பூமியின்  கீழ்   உள்ள      தண்ணீர்   தொட்டி    -  கிணறு      -   தண்ணீர்  சேமிக்கும்      பாத்திரங்கள் மண்ணெண்னை    -  குளீர்  சாதனப்  பெட்டி   - ஐ  ஸ்   வைக்கும்   பெட்டி    -   துணி   துவைக்கும்    இயந்திரம்   சமையல்   பாத்திரங்கள்   -   தண்ணீர்   குழாய்  -  நீர்   நிலையம்   -  முருங்கைக்  காய்   -  உப்பு     வாழை மரம்  கரும்பு   சந்தன   மரம்    நெல்  பயிர்    -  காய்   செடிகள்    -  பார்வதி   தேவி.
சாந்தி  ;  வெட்டி   வேர்   அரைத்த     சந்தனம்,   குங்குமம்,    சிவப்பு   சந்தனம்   கலந்த     சங்கோதகத்தினால்    ஸ்நானம்   செய்தால்   சந்திரனால்   ஏற்பட்ட        தோஷம்    நீக்கும்.    அரிசி  ஈயம்,    பசு,  முத்து,    வெள்ளை   வஸ்திரங்கள்,   நெய்,   பூரணமான   கலசம்,   ரிஷபம்   சோமவரத்தில்     தானம்   செய்ய   சந்திரப்   பீர்த்தியாகும்.

Wednesday, 11 November 2015

திருமணமும் பூர்வபுண்ணியமும்


ஐந்தாவது வீட்டின் மூலம் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பார்க்கலாம். இந்த ஐந்தாவது வீடு என்பது பூர்வ புண்ணியஸ்தானம் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறது. பூர்வ புண்ணியத்தை வைத்து தான் இந்த பிறவியில் என்ன நல்லது நடக்கும் என்ன கெடுதல் நடக்கும் என்று சொல்லுவார்கள். இந்த ஒரு வீடு நல்ல இருந்தாலே போதும் நீங்கள் வாழ்க்கையில் மிகுந்த நல்ல வசதி வாய்ப்போடு வாழ்வீர்கள் என்று 75 சதவீதம் சொல்லிவிடலாம்.

இந்த வீடு திருமணத்திற்க்கு என்ன செய்கிறது என்று பார்க்கலாம் பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் தான் திருமணம் நடைபெறும். பூர்வ புண்ணியத்தில் சிக்கல் இருந்தால் திருமணம் நடைபெறாமல் போகும் அல்லது திருமண வாழ்வில் பிரச்சினையை உண்டு செய்து முன்பிறவி பாவத்தின் கணக்கை தீர்த்துக்கொள்ளும்.
இந்த ஐந்தாம் வீடு நல்ல இருக்கும்பட்சத்தில் எல்லா விசயத்திலும் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் இந்த ஐந்தாவது வீடு கெட்டால் மாற்று ஏற்பாடு ஏதாவது இறைவன் வைத்திருக்கிறா என்று கேட்டால இந்த வீட்டிறக்கு மாற்றாக குரு கிரகம் நல்ல இருந்தால் நல்லது நடக்கும். ஐந்தாவது வீட்டிற்க்கு காரகனாக குருவை வைத்திருக்கிறார்கள்.
இந்த பூர்வ புண்ணிய வீட்டைக்கொண்டு தான் உங்களுக்கு இருப்பது மென்மையான உள்ளமா அல்லது அடுத்தவரை கெடுக்கும் உள்ளமா என்று தெரியவரும். அதைப்போல உங்களின் காதலை காட்டும் இடமும் இது தான் உங்களின் குழந்தைகளை காட்டும் இடமும் இது தான்.
நாம் முதலில் காதலைப்பற்றி பார்ப்போம் இந்த ஐந்தாவது வீட்டில் நல்ல கிரகங்கள் தங்கியிருந்தால் சுகமான காதல் அனுபவங்கள் ஏற்படும் நல்லவர் காதலராக அமைவார். காதல் வானில் சிறகடித்து பறக்கலாம் அவரே உங்களுக்கு வாழ்க்கை துணைவராக அமைவார்.இந்த மாதிரி நடந்துவிட்டால நல்லது.
இந்த வீடு கெட்டால் உங்களை காதலில் விழ செய்து அந்த காதலை தோல்வியை அடைய செய்துவிடும். உங்களின் மனநிலை பழையதை நினைத்து ஏங்கசெய்துவிடும்.பிறகு என்ன உங்கள் மனநிலை பாதிப்படைய செய்யும். வாழ்க்கையின் மீது வெறுப்பு அடைந்து எங்கே சென்றால் நிம்மதி வரும் என்று நினைக்க தோன்றும்.
எனக்கு வரும் போன்களில் அதிகபட்சமாக கேட்கும் கேள்வியே நான் ஒருத்தரை காதலித்தேன். அவர் என்னை விட்டு போய்விட்டார். நான் ஒரு பெண்ணை காதலித்தேன் அந்த பெண் இப்பொழுது என்னுடன் பேசுவதில்லை எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எனக்கு வழி சொல்லுங்கள் என்று தான் அதிகமாக கேட்கிறார்கள். நான் என்ன செய்வது
ஜாதகங்களில் இந்த வீடு கெட்டால் அதுபோல் நடந்து தான் தீரும். இடையில் வரும் கோச்சாரபலன்கள் மற்றும் தசாபுத்தி பலன்கள் உங்கள் காதலுக்கு வேட்டு வைத்துவிடும். நீங்கள் முதலில் காதல் செய்தால் திருமணத்தை உடனே வைத்துக்கொள்வது நன்மை அளிக்கும் இல்லை ஒவ்வொன்றாக பரிகாரம் செய்து முடிப்பதற்க்குள் உங்களின் துணைவருக்கு திருமணத்தை நடத்திவிடுவார்கள்.
இந்த வீடு கெட்டால் “பரதேச வாழ்வு” தான் இருக்கும் உங்கள் குடும்பத்தினரை விட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய கட்டாயத்தை இந்த வீடு செய்யும். காதலில் ஒருவர் விழுவதற்க்கு தனிமை தான் முதல் காரணமாக இருக்கமுடியும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒருவர் தேவை என்பதால் காதலில் விழுந்துவிடுகிறார்கள்.
இந்த வீடு கெட்டால் உங்கள் ஊரில் வாழவேண்டிய கட்டாயம் இருந்தாலும் வாழாதீர்கள் ஏன் என்றால் வெளியிடங்களில் வாழ்ந்தால் தான் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
குழந்தை ஸ்தானம் எனவும் ஐந்தாம் வீட்டை அழைப்போம். தனக்கு பிறக்கும் குழந்தைகளை காட்டகூடிய ஸ்தானம். திருமண வாழ்வில் குழந்தைகள் என்பது முக்கியமான ஒன்று. குழந்தைகள் இல்லை என்றால் அந்த திருமண வாழ்வு சிறக்காது. அந்த தம்பதினர் நல்ல இருந்தாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்டே பேச்சால் கொலை செய்துவிடுவார்கள். வேறு கிரக நிலைகளை வைத்து குழந்தை பாக்கியம் இருந்தாலும். அந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகதான் இருக்கும்.
அதன் தொடர்ச்சி இப்பதிவில் ஐந்தாவது வீட்டில் கெட்டகிரகங்கள் இருந்தால் என்ன செய்யும் என்றால் உங்களுக்கு பணத்தை நிறைய தரும். ஐந்தாம் வீட்டில் கெட்ட கிரகங்கள் இருந்து உங்களுக்கு பணம் தட்டுப்பாடு இல்லாமல் வந்தால் உங்களின் திருமண விசயத்தில் அல்லது குழந்தைகள் விசயத்தில் ஆப்பு அடிக்க போகிறது என்று அர்த்தம். உனக்கு பணத்தை இப்பொழுது கொடுப்பேன் டா அடுத்தது உன் மனநிம்மதிக்கு ஆப்பு அடிப்பேன் டா என்று நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்.
அதிலும் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்தால் இந்த பலனை கனகச்சிதமாக செய்வார் அவர் மூன்றாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்த்துவிடுவார் திருமண வாழ்வு அல்லது குழந்தைகளின் விசயத்தில் அருமையாக உங்களை விளையாடிவிடுவார்.இந்த வீட்டைப்பொருத்தவரை எந்த கிரகங்கள் உட்கார்ந்தாலும் பிரச்சினை தான். இதில் ராகு கேது உடகார்ந்தால் பித்ரு தோஷம் என்பார்கள் இதில் எந்த கிரகம் உட்கார்ந்தாலும் முன் ஜென்ம தோஷம் தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம்.
ராகு கேது அமர்ந்தால் எப்படி வேலை செய்யும் என்றால் நீங்கள் ஒரு இண்டர்வியூ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒவ்வொரு இண்டர்வியூ பாஸ் செய்து கடைசி இண்டர்வியூவில் உங்களை கவிழ்த்து விடுவார் கடைசி நிமிடத்தில் வேலை வாய்ப்பை இழப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் இந்த மாதிரி நடந்தால் அது ராகு கேது உங்களை ஐந்தாம் வீட்டில் இருந்து கெடுக்கிறார் என்று அர்த்தம்.
ஐந்தாம் வீட்டை வைத்துதான் நமக்கு குலதெய்வத்தின் அருள் இருக்குமா என்று சொல்லமுடியும் இந்த வீடு கெட்டால் குலதெய்வ அருள் கிடைக்காது எந்த அருளும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் என்று சொல்லலாம் அதைப்பற்றி இப்பொழுது நாம் பார்க்க வேண்டாம்.
இந்த ஐந்தாம் வீடு கெட்டால் நீங்கள் என்ன தான் உருண்டு புரண்டாலும் கடவுள் உங்களை பார்க்கவே மாட்டார் என்று தான் சொல்லவேண்டும். பின்பு எப்படி டா முன்னேறுவது என்று கேட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் துணையோடு வழிபாட்டை நடத்தவும் அல்லது உங்களின் நண்பர்களுக்கு ஐந்தாவது வீடு நன்றாக இருந்தால் அவர்கள் மூலம் வழிபாட்டை செய்யலாம். நாம சாமி கும்பிடுவதற்க்கு அடுத்தவன் துணை தேவைபடுகிறது என்றால் எவ்வளவு கொடுமை என்று பாருங்கள்.
ஒரு சில குடும்பங்களில் பார்த்தீர்கள் என்றால் பரிகாரம் செய்வதற்க்கு அல்லது கோவில் செல்லுவதற்க்கு சோதிடர்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள் ஏன் என்றால் சோதிடர்களுக்கு கேது அல்லது குரு பலம் நன்றாக இருக்கும் கோவிலில் இருக்கும் சக்தி நன்றாக கிரகத்து அடுத்தவர்களுக்கு கொடுக்கமுடியும் அதனால் சோதிடர்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள். நாங்களும் ஓசியில் ஊரை சுற்றி பார்ப்பதற்க்கு வசதியாக இருக்கும்.
இந்த ஐந்தாவது வீடு கெட்டது என்றால் அந்த ஆசாமி கொலை செய்யக்கூட தயங்கமாட்டான். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் நீங்கள் அவனின் நட்பை விட்டு விலகி இருப்பது நன்மையளிக்கும். முன்ஜென்மத்தில் செய்த வில்லகத்தின் மீதி இந்த ஜென்மத்தில் இருக்கும் உங்களை கொல்வதற்க்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள்.
நீங்கள் சாதாரண மனிதனாக அடுத்தவரை பார்ப்பதற்க்கும் நீங்கள் சோதிடகாரனாக பார்ப்பதற்க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் சோதிடர்கள் அதனால் ஒரு மனிதனை சோதிட கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். வந்திருப்பவர யார் எதற்காக வந்திருக்கிறார் என்ன இவர் செய்வார் என்று  அடுத்தவரை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லை சோதிடர்களாகிய நமக்கே ஆப்பு அடித்துவிடுவார்கள். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் நம்மை காப்பாற்றிக்கொள்வது என்பது முதல் கடமை நமது வேலையே அடுத்தவரைப்பற்றி தெரிந்துக்கொள்வது தானே நாம கோட்டையை விடலாமா அதனால் சொன்னேன் நண்பர்களே. போதுமா பூர்வபுண்ணிய வீட்டை திருமணம் மூலம் பார்த்தது.
பூர்வ புண்ணியத்திற்க்கு என்ன பரிகாரம் செய்தால் நல்லது என்று நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் .

Thursday, 5 November 2015

பூர்வ புண்ணியம் என்றால் என்ன ?

கேள்வி :

பூர்வ புண்ணியம் என்றால் என்ன ??  பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன??? அதற்கான காரணம் என்ன ???
பரிகாரம் என்ன ??? எவ்வாறு பூர்வ புண்ணியம் கெடுகின்றது ???
 பதில் : 

சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் .

 சுய ஜாதகத்தில் மிகவும் நன்றாக இருக்க வேண்டிய வீடுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது இந்த பூர்வ புண்ணியம் ஆகும் , இந்த வீடு நல்ல நிலையில் ஒரு ஜாதருக்கு இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு சிறு வயது முதல் கிடைக்க வேண்டிய நன்மைகள் யாவும் சிறப்பான முறையில் தொடர்ந்து கிடைத்து கொண்டே இருக்கும்.

 குறிப்பாக ( குழந்தை பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் , மன 
ஆரோக்கியம் , நல்ல அடிப்படை கல்வி , தந்தை தாயாருடன் வாழும் சூழ்நிலை, அவர்களின்  முழு அன்பும் ஆதரவும் கிடைக்க பெறுதல் ) என அடிப்படையில் நல்ல சூழ்நிலையில் வாழ்க்கையை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக தொடரும் நிலை கிடக்க பெரும் ஜாதகராக காணப்படுவார் .  தனது குல தெய்வத்தின் பரிபூரண அருள் ஜாதகருக்கு நிறைந்து எப்பொழுது ஜாதகரை காத்து நிற்கும் .

ஜாதகரின் பூர்விகம் எதுவோ அங்கிருந்தே ஜாதகருக்கு சகல யோகங்களையும் பெரும் அமைப்பு , சமுதாயத்தில் மற்றவருக்கு முன் மாதிரியாக செயல் படும் தன்மை என ஜாதகர் நன்மையனைத்தும் அனுபவிக்க பூர்வபுண்ணியம் நிச்சயம் நன்றாக இருப்பது நன்மை தரும்.

மேலும் ஜாதகருக்கு நன்மக்களின் அறிமுகமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்க பெரும் பாக்கியம் ஜாதகருக்கு நிச்சயம் கிடைக்கும் , தன விருத்தியும் , துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கியே பயணம் செய்யும் காரணம் குல தெய்வத்தின் பரிபூரண கருணையே !?

ஜாதகருக்கு திருமணம் ஆன சில மாதங்களிலேயே நல்லதொரு வாரிசு அமைப்பை பெரும் தன்மையும் குறைவு இல்லாமல் கிடைக்க பெறுவார், அந்த குழந்தை பிறப்பின் மூலமாகவும் ஜாதகர் யோக வாழ்வினையே பெறுவார் .

 பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன?  

சுய ஜாதகத்தில் பூர்விகம் பாதிப்படைந்து இருந்தால் , ஜாதகர் அந்த வீட்டுக்குண்டான தன்மையை விருத்திசெய்துகொள்ள நிச்சயம் வாய்ப்பு உண்டு.

 ஆனால் கெட்டு விட்டது என்றால் ஜாதகரால் ஒன்றும் செய்ய இயலாது  இந்த அமைப்பை பெற்றவர்கள் தனதுபூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100  கிலோமிட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது சகல முன்னேற்றத்தையும் தரும், வேறு வழியே கிடையாது .இந்த ஜாதகர் இதை தவிர்ப்பாரே ஆயின் நிச்சயம் ஜாதரால் கஷ்டங்களை தாக்கு பிடிக்க முடியாது, தனது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகி விடும். 

பூர்விகம் கெடுவதற்கு முக்கிய காரணங்கள் :

ஜாதகரின் முன்னோர்கள் தம்மை நாடிவந்தவர்களை நிந்தனை செய்வதாலும், பெண்களை போக பொருளாக நடத்தியதாலும் , தனது மனைவியை கொடுமை செய்து  மனம் நோக செய்ததாலும் , பசுவை கொன்றதாலும் , இளம் பெண்ணை  மான பங்கம் செய்ததாலும் .

 மற்றவர் சொத்தை அகபரித்து கொண்டு  அவர்களை மனம் நோக செய்ததாலும் , மற்றவர் மரணத்திற்கு நேரடியாக மறைமுகமாக காரணமாக இருந்தாலும் , சிவனடியார்களுக்கு அண்ணம் இடாத காரணத்தாலும், தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , தனது குழந்தையை தானே கொன்றதாலும் , தனது பெற்றோர்களை வயதான காலத்தில்  பேணி பாதுகாக்கும் கடமையை செய்யாத காரணத்தினாலும். கோவில் சொத்தை அகபரித்து கொண்ட காரணத்தினாலும்  நிச்சயம் பூர்விகம் 100  சதவிகதம் பாதிப்படைய வாய்ப்பு உண்டு .

பரிகாரம் :

தனது முன்னோர்கள் என்ன தவறை செய்தனரோ அந்த தவறுகளை  தான் செய்யாமலும் , அனைவரிடத்திலும் அன்பாகவும், மற்றவர்களால் வரும் துன்பங்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டும் , தனது பெற்றோர்களையும் , உடன் பிறப்புக்களையும் அனுசரித்தும் , அவர்களுக்கு தேவையானவற்றை, சந்தோஷத்துடன் செய்து கொடுப்பதும் , குறிப்பாக தனது மனைவிக்கு நல்ல கணவனாகவும் , தனது குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் நடந்துகொண்டு  , தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வது தனது வாரிசுகளுக்கும் , பின்வரும் சந்ததியினருக்கு 100  சதவிகிதம்  பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்க  வழிவகுக்கும் .  

ஜாதக அமைப்பில் ஐந்தாம் வீடு பாதிப்படந்ததை எப்படி கண்டு பிடிப்பது ?

மேஷம் , விருச்சகம் , சிம்மம் , மகரம் , கும்பம் ஆகிய வீடுகள் ஐந்தாம் வீடாக வந்து அந்த வீடுகளில் ராகு அல்லது கேது அமர்ந்து இருந்தால்
 ( ஐந்தாம் வீடுக்குண்டான பாகைகளில் ) ஜாதகரின் பூர்வ புண்ணியம் 100  சதவிகதம் பாதிப்படைந்து விடும் , அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உண்டான அதிபதி தனது வீட்டுக்கு மறைவு நிலை பெற்றால். ஜாதகருக்கு பூர்வீகம் 100   பாதிக்க வாய்ப்பு இருக்கின்றது .

ஜீவன ஸ்தான அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு சரியான தொழில் நிர்ணயம் செய்வது எப்படி ?

சுய ஜாதகத்தில் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகத்தில் முதன்மையாக கருதவேண்டிய பாவகம் ஜீவன ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், மாறாக வலிமை இழக்கும் பொழுது ஜாதகரின் வேலை அல்லது தொழில் சிறப்பாக அமையாமல் ஜாதகரின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய  சில நல்ல விஷயங்கள் கூட நடை பெறாமல் தாமதம் அல்லது தடையை ஏற்படுத்துகிறது , குறிப்பாக சொல்லவேண்டும் எனில் ஜாதகருக்கு நல்ல வேலை அல்லது தொழில் அமைந்தால் மட்டுமே நல்ல திருமண வாழ்க்கை சரியான வயதில் அமைகிறது, மேலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற இயலும்.

முக்கியமாக  தனது பெற்றோர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல், அவர்களின் வயதான காலத்தில் ஜாதகரால் சந்தோஷமாக வைத்துகொள்ள முடிகிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே ஜாதகர் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதராக இயங்க முடியும், இல்லை எனில் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்புதான், மேலும் தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே ஜாதகர் மற்றவர்களின் கரங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டிய சூழ்நிலை தந்துவிடுகிறது .

ஜீவனம் நல்ல நிலையில் அமையாத பொழுதே ஜாதகர் தவறான வழியில் தனது வாழ்க்கை வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் , தான் சுயமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை தரும் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகரால் தனிப்பட்டு செயல்பட  இயலாமல் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, ஒருவேளை சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்டு இருந்தால் 10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியம்.

10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் நடை பெரும் காலம் வரையில் ஜாதகருக்கு நல்ல ஜீவனம் அமையாது , திருமணம் நடைபெற்ற குறுகிய காலத்திலேயே ஜாதகர் நல்ல ஜீவன முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தந்துவிடும், சில அன்பர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பது இதன் அடிப்படியிலேயே என்பது மட்டுமே முற்றிலும் உண்மை , இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையை மிகவும் அன்பாக நடத்துவது அவசியம் காரணம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தந்ததும், சமுதாயத்தில் சிறந்த கௌரவத்தையும் தந்தது ஜாதகரின் வாழ்க்கை துணைதானே .

மேற்கண்ட  ஜீவனம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர்  களத்திர ஸ்தானத்திற்கு 10ம் வீடான 4ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவக வழியில் இருந்தும்  ஜீவனத்தை தரும் , ஜாதகர் 4ம் பாவக வழியில் இருந்து ஜீவன வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் .

ஆக ஒரு ஜாதகர் வாழ்க்கையில் ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் தகப்பனாரை குறிக்கும் 10ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது தாயாரை குறிக்கும் 4ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், இந்த இரண்டும் ஒருவேளை பாதிக்க படும் பொழுது  ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேற்கண்ட 3பாவகமும் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சார ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் தனது சுய முயற்ற்சியால் தனித்து செயல்பட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பில் எளிமையான வெற்றிகளையும் , மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை பெரும் தன்மையை தந்துவிடும். குறிப்பாக ஜாதகருக்கு அமையும் தொழில் அல்லது வேலை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கி விடும் , வருமானம் என்பது மிக அதிக அளவில் கிடைக்கும், ஜாதகருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது எவராலும் நினைத்து பார்க்காத அளவில் இருக்கும்.

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர  ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் ஸ்திரமான நிலையுடன் நிரந்தர  ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும் , மேலும் ஜாதகர் பல தொழில் செய்யும் யோகத்தையும், தொடர்ந்து நிலையான நல்ல வருமானத்தை பெரும் தன்மையையும் தந்துவிடும், ஜாதகர் ஆரம்பிக்கும் தொழில்கள் பல தலைமுறைக்கு தொடர்ந்து நிலையாக நடந்துகொண்டே இருக்கும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் கூட்டு தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றங்களை பெறுபவராக இருப்பார், பல பெரிய மனிதர்கள் செய்யும் தொழில்களில் ஜாதகருக்கும் கணிசமான பங்கு நிச்சயம் இருக்கும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மற்றவர்களை சார்ந்தே இருக்கும் என்பது கவனிக்க தக்கது, இவர்கள் செய்யும் சிறு தொழில்கள் அல்லது கூட்டு தொழில்கள் நல்ல வெற்றியை தரும், ஆனால் ஜாதகர் பெரிய தொழில்களில் தனித்து இறங்குவது அவ்வளவு நல்லதல்ல, பெரிய வளர்சியையும் தருவதில்லை.

ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் செய்யும் எந்த ஒரு தொழிலும் ஜாதகருக்கு நிச்சயம் தோல்வியை தருவதில்லை, இதை ஒரு சிறந்த  ஜோதிடரை கொண்டு தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திரம்,சுக ஸ்தானத்தின் வலிமை உணர்ந்து , செய்யும் தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள் அன்பர்களே !

அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தாங்கள் செய்யும் தொழில் 3 அல்லது 4 வருடங்களில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னிறைவான வாழ்க்கையையும் தரும் , இதை தவிர்த்து 4 வருடங்களுக்கு மேலும் தங்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துகொண்டு இருக்கின்றீர்கள் என்றால்,  தங்களுக்கு பொருந்தாத தொழிலை அல்லது வேலையை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதே முற்றிலும் உண்மை .

Tuesday, 20 October 2015

ஜாதகத்தில் வீட்டின் பலன்கள்

ஜாதகத்தில் வீட்டின் பலன்கள்


ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)

- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )


- 3, 6 , 8 , 12 - மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.


1 ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது மிக்க பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.

3 ஆம் வீடு - சுமார்.

6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.

ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.

Thursday, 15 October 2015

ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. அவற்றின் குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை பலன் சொல்லப் பயன் படும்.

ஆண், பெண் ராசிகள் :

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். ராசிகளை ஆன், பெண் எனப் பிரிப்பதின் அவசியம் தெரிகிறது அல்லவா?

வடக்கு, தெற்கு ராசி

மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப் படும்.
நெருப்பு ராசி (Fiery Signs)

மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில்

இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

நிலராசி (Earthy Signs)

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

காற்று ராசி (Airy sign)

நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.

ஜலராசிகள்(Watery Signs)


கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful Signs என்றும் சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்.

இதைத் தவிர ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசியங்களைக் கூறி இருக்கிறார்கள். அவைகளையெல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர நன்மை பயக்கும் ராசிகள், மலட்டுத் தன்மையுள்ள ராசிகள், நன்மை பயக்காத ராசிகள், ஊமை ராசிகள், முரட்டு ராசிகள், மனித ராசிகள், சப்த ராசிகள், நான்குகால் ராசிகள், இரட்டை ராசிகள், குட்டை ராசிகள் நீள ராசிகள் என பல வகைப்பட்ட ராசிகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லும்போது மிக உதவியாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றியெல்லாம் அடுத்த பாடத்தில்

பார்ப்போம்.
சர ராசி : மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.

சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.

3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.

ஸ்திர ராசி : மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா, புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.

உபய ராசி : உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.
நம்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs) : எல்லா ஜல ராசிகளும் இந்த வகையைச் சேர்ந்தன. ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை பாதி நம்மை (Semi Fruitful Signs) பயக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லை எனக்கொள்ளுங்கள். இவர் ஜாதகத்தில் 5-ம் வீடு Fruitful Sign ஆகி 5-க்குடையவன் மற்றொரு Fruitful Sign-ல் இருப்பாரேயாகில் அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு எனக் கொள்ளலாம். இந்த Fruitful Sign ஆனது அதில் உள்ள கிரகங்களையும் நன்மைபயக்கும் கிரகங்கள் ஆக்குகின்றன. அதே போன்று கணவர் மனைவியர் ஏதோ சந்தர்பத்தின் காரணமாகப் பிரிந்து இருக்கின்றனர் எனக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்ற கேள்வி எழும். அப்போது இந்த ராசியில் உள்ள கிரகங்கள் பலன் சொல்லப் பயன் படும். நீங்கள் ஆரூடத்திப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதாவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன் படும் ஜாதகம். அதாவது அவர்கள் கேள்வி கேட்க்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுவார்கள். ஒருவர் நம்மிடம் வந்து "நான் தேர்வில் வெற்றி பெருவேனா?"- என்று கேட்கிறார் எனக் கொள்வோம். அவரிடம் ஜாதகம் இல்லை. நாம் அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்துப் பார்க்கிறோம். தேர்வு, படிப்பு ஆகியவைகளை 4-ம் வீடு குறிக்கிறது. 4-ம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்து 4-ம் வீட்டிற்குடையவர் 11-ம் வீட்டில் அதுவும் 11-ம் வீடு Fruitful Sign ஆகவும் இருந்து விட்டால் நாம் எளிதாகச் சொல்லலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் என்று அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பலவழிகளில் இந்த Fruitful Signs - உதவி புரிகிறது.கடகம், விருச்சிகம், தனுசு ஆகியவைகல் Fruitful signs எனப்படும்.

வறண்ட ரசிகள் (Barren Signs) : Fruitful Signs - களுக்கு எதிர் மறையான ராசிகள் இந்த வறண்ட ராசிகள் அல்லது Barren Signs. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் எனப்படும். இந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது.

ஊமை ராசிகள் (Mute Signs) : எல்லா ஜல ராசிகளும், அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை Mute Signs அல்லது ஊமை ராசிகள் எனப்படும். இதை சற்று விளக்கமாக எழுதுகின்றோம். ஒருவருக்கு ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. 2-ம் வீடு ஊமை ராசியாக வந்து அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் அவர் திக்கித், திக்கிப் பேசுவார். செவ்வாய் பார்த்தால் மிக வேகமாகப் பேசுவார். குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.

முரட்டு ராசிகள் : மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் எனப்படும். இவற்றிற்கு அதிபதி செவ்வாய் அல்லவா? செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் அல்லவா ? அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் எனப்படும்.

நான்கு கால் ராசிகள் : மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். செம்மரிக் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் அல்லவா? அதனால் தான் இவைகள் நாலுகால் ராசிகள் என்றழைக்கப் படுகின்றன. சரி! இந்த ராசிகள் பலன் சொல்ல எப்படிப் பயன் படுகின்றன? எனக்கு மிகவும் வேண்டியவர்" நான் கார் வாங்க ஆசைப் படுகிறேன்? என்னால் வாங்க முடியுமா?" என்று கேட்டார். அவர் ஜாதகத்தை பார்த்தோம். அவருக்கு அப்போது சனிதசை, சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய கணக்குப்படி அந்த தசா புக்தியில் அவருக்கு வாகன யோகம் வந்து இருந்தது. அவர் கார் வாங்குவாரா அல்லது மோட்டார் சைக்கிள் வாங்குவாரா என்று எப்படிச் சொல்வது? புக்தி நாதன் சூரியன் அவருக்கு மகரத்தில் இருந்தார். மகரம் நாலுகால் ராசியல்லவா? ஆகவே சூரியன் நாலுகால் ராசியின் பலனைக் கொடுப்பார் என்று நீங்கள் கார் வாங்குவீர்கள் என்று கூறினோம். இப்போது புரிகிறதா ? நாலுகால் ராசியின் உபயோகத்தை. அவரும் நாம் கூறியபடி அப்போது கார் வாங்கினார்.

இரட்டை ராசிகள் (Dual Signs) : மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். இந்த ராசிகளின் உபயோகம் என்ன? ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் சொல்லலாம். புதனுக்கு இரட்டைக் கிரகம் என்ற பெயர் உண்டு. அவர் ஒருவரின் ஜீவனஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது அதில் இருந்தாலோ அவருக்கு இரட்டை வருமானம் வரும் எனக் கூறலாம். இரட்டை வருமானம் எப்படிக் கிடைக்கும்?

ஒருவர் ஓர் அலுவலகத்தில் பணிபுரியலாம். மாலை நேரத்தில் வேறொரு இடத்தில் Part-time வேலை செய்யலாம். இது இரட்டை வருமானம் அல்லவா? சிலர் வேலை பார்த்துக் கொண்டே Insurance Agent ஆக இருப்பார்கள். இதுவும் இரட்டை வருமானம் தான். சிலர் அரசாங்கத்தில் வேலை செய்வார்கள். சம்பளம் கிடைக்கும். அதைத்தவிர மேஜைக்கு அடியிலும் வாங்குவார்கள். இதுவும் இரட்டை வருமானம்தான். இந்த மாதிரி மேஜைக்கு அடியில் வாங்குபவர்களுக்கு 10-ம் வீட்டில் புதனுடன் சனியும் சேர்ந்து இருக்கும். அல்லது சனியின் பார்வையாவது இருக்கும். சனியின் தொடர்பு இருந்தால்தான் இந்த மாதிரி மேஜைக்கு அடியில் பணம் வாங்க முடியும். சனி எதையும் ரகசியமாகச் செய்யக்கூடியவர் அல்லவா? 1983-ல் நாம் குடியிருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த ஒருவர் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் தான் வீடு கட்ட முயற்சி செய்வதாயும் தன் ஜாதகப்படி வீடு கட்டமுடியுமா எனக் கேட்டார். அவர் ஜாதகத்தில் அவர் கன்னி இலக்கினம். 4-ம் வீட்டில் புதன். செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருந்தார். மற்ற கிரகங்கள் ஞாபகத்தில் இல்லை. நாம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கு வீடு கட்ட யோகம் வந்துவிட்டது. "நன்றாகக் கட்டுங்கள்" என்று கூறினோம். அவர் "கடன் வாங்கித்தான் கட்ட வேண்டும். கட்ட முடியுமா?" என்று திரும்பவும் கேட்டார். நாம் "உங்கள் ஜாதகப் படி இரண்டு வீட்டிற்கு யோகம் இருக்கிறது. ஏன் தயங்குகிறீர்கள்?" எனக் கூறினோம். அவர் உடனே "ஒரு வீட்டிற்கே வழி இல்லை; இரண்டு வீடு கட்டுவேன் என்கிறீர்களே" என்று கூறிவிட்டுப் போய்விட்டார். சிலமாதங்களில் நாம் வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கிருந்து வந்து விட்டோம். பல ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பழைய நண்பர் திரும்பவும் என்னைத் தேடிக் கொண்டு வந்தார். "நீங்கள் முன்பு கூறியபடி நான் இப்போது 2-வது வீட்டிற்குப் பணம் கொடுத்து விட்டேன். ஆனால் FLAT இன்னும் கைக்குவரவில்லை; எப்போது கிடைக்கும் என்று உங்களைக் கேட்க்கத்தான் வந்தேன்" என்று கூறினார். நாம் அவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம்." நாம் எப்படி அவருக்கு இரண்டு வீடு கிடைக்கும் என்று கூறினோம்?" என்று உங்களுக்குக் கூறுகிறோம். அவர் ஜாதகத்தில் 4-ம் வீடு இரட்டை ராசி. அதாவது தனுசு. அந்த வீட்டில் இரட்டைக் கிரகமான புதனும் இருக்கிறார். பூமிகாரகனான செவ்வாயும் 4-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே நாம் அவருக்கு இரண்டு வீடுகள் உண்டு என்றுகூறினோம். அது பலித்து விட்டது. ஆக இரட்டை ராசிகளின் உபயோகம் தெரிகிறதல்லவா?