Wednesday, 27 January 2016

இராசிக்கு ஏற்பத்தான் வாய்ப்பாள் மனைவி

ஓர் ஆணின் ஜாதகத்தில் அவன் பிறந்த இலக்கினத்துக்கு ஏழாமிடத்து இராசி எதுவென்று பார்க்கவேண்டும் அந்த ஏழாவதுஇராசியானது இராசிச் சக்கரத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுள் எந்த ராசியாக அமைகிறதோ அந்த இராசிக்கு ஏற்பத்தான் அந்த ஜாதகருக்கு வாய்க்கும் மனைவியின் அழகும் குணபாவங்களும் ஒழுக்கமும் அமைந்திருக்கும்

       உதாரணமாக நீங்கள் எடுத்துக்கொண்ட ஆணின் ஜாதக இலக்கினம் துலாமாக இருந்தால் அதற்கு ஏழாவது வீடு அல்லது ஸ்தானம் மேஷஇராசியாகும் இந்த மேஷ இராசிதான் துலாஇலக்கினகாரருக்கு உரிய களத்திரஸ்தானமாகும் இந்த மேஷ இராசிக்கு அதிபதி செவ்வாய் எனவே செவ்வாயே களத்திரபாவாதியாகவும் ஏழாதிபன் என்றும் வழங்குவார்கள் ஆகவே ஜாதகரின் இலக்கினத்துக்கு ஏழாவது ஸ்தானமாக அமைந்திருப்பது
மேஷ இராசியானால்
அந்த ஜாதகரின் மனைவி சபல சித்தமுள்ளவளாகவும் பணத்தின் மீது அதிகப்பிரியமுள்ளவளாகவும் பணம் சேர்ப்பதிலேயே அக்கறையுள்ளவளாகவும் இருப்பாள் கணவனிடத்திலும் பணத்தையே தான்பெரிதும் விரும்புவாள் எவையேனும் யாசிக்கும் குணமுள்ளவளாகவும் இருப்பாள்

ரிஷப இராசியானால்
மனைவியாக வாய்த்தவள் ஜாதகருக்கு சம்மாக ஒத்திருப்பாள்பணிவுள்ளவளாகவும் இருப்பாள் மென்மையும் இனிமையுமாகப் பேசுபவளாகவும் மிகவும் சாந்தகுணமுள்ளவளாகவும் அச்சமும் பெரியோர்களிடத்திலும் அந்தணர்களிடத்திலும் தெய்வங்களிடத்திலும் பக்தியுள்ளவளாகவும் இருப்பாள்

மிதுன இராசியானால்
பணத்துடன் கூடியவளாகவே மனைவி அமைவாள் நல்ல ரூபவதியாகவும் நற்குணமுள்ளவளாகவும் நல்ல நடத்தையுள்ளவளாகவும் அடக்கமான அலங்காரம் செய்து கொள்பவளாகவும் கஷ்ட குணமும் செயலும்பேச்சும் அற்றவளாகவும் விளங்குவாள்

கடக இராசியானால்
கணவனின் மனத்திற்கு பிரியமானவளாகவும் சகல செளபாக்கியங்களுடன் நற்குணமுள்ளவளாகவும் திகழ்வாள் தோஷம் எதுவும் இல்லாதவளாகவும் யாவருடனும் இனிமையாக பழகும் பண்புள்ளவளாகவும் அமைவாள் இந்த இராசி ஏழாமிடமாக அமையும் ஜாதகருக்கு ஒரே மனைவிதான் இருப்பாள் என்று சொல்வதிற்கில்லை ஏனென்றால் ஒரே களத்திரமாக இராது என்பது விதி

சிம்ம இராசியானால்
எதிலும் தீவிரமான சுபாவமுள்ளவளாகவும் சபலபுத்தியுள்ளவளாகவும் மிகவும் தைரியமுள்ளவளாகவும் திகழ்வாள் தாழ்ந்த நிலையிலிருப்பவளைப் போல் வேஷம் போடுவாள் பிறர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் ஆசையுள்ளவள் கடுமைக்குரலும் இளைத்த உடல்வாகும் குறைந்த புத்திரப்பேறும் உடையவளாக இருப்பாள்
கன்னி இராசியானால்
அமைகின்ற மனைவி அழகான உடற்கட்டுடையவள் பெரும்பாலும் புத்திரப்பேறு இருக்காது இவள் செளபாக்கியம் போபம் பொருட்செலவு பயம் இவற்றுடன் கூடியவளாகவும் இருப்பாள் யாரிடமும் அன்பும் பிரியமுமாகப் பேசுவாள் சாமர்த்தியம்மிக்கவள்

துலாம் இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி நல்ல சிறப்பிற்குரிய அங்கமற்றவளாகவும் பற்பல விதமான மனநாட்டங்களையும் இச்சைகளையும் கொண்டவளாகவும் புண்ணியச் செயல்களில் பற்றுள்ளவளாகவும் தானதர்ம்ம் செய்வதில் விருப்பமுள்ளவளாகவும் மிகுதியான புத்திர யோகமுள்ளவளாகவும் பெருத்த அங்கமுள்ளவளாகவும் இருப்பாள் பொதுவாக இப்படியுள்ள ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரங்கள் அமையும்

விருச்சிக இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி கஞ்சத்தனமான கருமியாகவும் எதையும் தீர யோசித்து ஒரே முயற்சியிலேயே எந்தக் காரியத்திலும் வெற்றியடையக் கூடியவளாகவும் பற்பல தெளர்பாக்கிய தோஷங்களுடனும் கூடியவளாக இருப்பாள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட களத்திரம் இத்தகைய ஜாதகருக்கு அமையும்

தனுசு இராசியானால்
அவருக்கு மனைவியாக அமைபவள் புருஷ சரீரம் படைத்தவளாகவும் பக்தி நியாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாதவளாகவும் நிஷ்டூரமான குணமுள்ளவளாகவும் இனிமையாகப் பழகத் தெரியாதவளாகவும் புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் இல்லாதவளாகவும் இருப்பாள்

மகர இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி பார்ப்பவர்களுக்கு தர்ம நியாயம் தவறாதவளைப் போல நடிப்பவள் நல்ல பெண்ணுடல் கொண்டவள் கற்புள்ளவளாகவும் அழகிய குணபாவமுள்ளவளாகவும் நல்ல புத்திர்ர்களைப் பெற்றுத் தருபவளாகவும் இருப்பாள்

கும்ப இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி நிலையான புத்தியுள்ளவளாகவும் கணவனுக்குப் பணிவிடைகளைச் செய்வதில் பற்றுள்ளவளாகவும் தேவர் மற்றும் பிராமணபக்தியுள்ளவளாகவும் தர்ம்ம் செய்வதில் விருப்பமுள்ளவளைப் போல வெளிவேஷம் போடுபவளாகவும் சகலவிதமான சுகங்களையும் தருபவளாகவும் இருப்பாள்

மீன இராசியானால்
அவருக்கு அமையும் மனைவி விகாரமானவளாகவும் கெட்ட புத்தியுள்ளவளாகவும் சுயதர்ம்ம் நல்லநடத்தை நல்ல ஒழுக்கம் ஆகியவை இல்லாதவளாகவும் அன்பில்லாதவளாகவும் அடிக்கடி சண்டையிடும் குணமுள்ளவளாகவும் விளங்குவாள் இப்படித்தான் ஒவ்வோர் ஆணுக்கும் அவரது களத்திரபாவம் அமைந்துள்ள இராசிப்படிதான் மனைவி அமைவாளோ தவிர மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரமாக மட்டுமே இருப்பதில்லை சிலருக்கு இறைவன் கொடுத்த சாபத்தைப் போலவும் மனைவி அமைவதுண்டு ஆனால் அது திருமணம் செய்து கொள்ளும் போது தெரியாமற்போவது விதியின் வலிமையாகும் இதைத் தெளிவுபடுத்துவது ஜோதிட சாஸ்திரமாகும் ஒருவருக்கு மனைவி அமைவது அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானதிபதி இருக்குமிடத்தை பொறுத்தும் மாறுதல் அடையக்கூடும் அதன் விளக்கத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் இந்த விதிகள் இலக்கினத்துக்கும் இராசிக்கும் பொருத்தமானவை என்றாலும் இலக்கினத்துக்கு ஏழாவது பாவந்தான் களத்திர பாவமாகையால் கோட்சார பலனைப் பார்ப்பது நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கினத்தை அடிப்படையாக்க் கொண்டு தான் ஜாதகத்தைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் பலன்களையும் நிச்சயிக்க வேண்டும் இதில் குழப்பம் அடைந்துவிடக்கூடாது.

No comments:

Post a Comment